தமிழகம்

SIR | அரியலூர் மாவட்டத்தில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்!

செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 24,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பொ.ரத்தினசாமி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

‘அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,25,652 ஆண்கள், 1,26,668 பெண்கள், 13 இதரர் என 2,52,333 வாக்காளர்கள், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,26,324 ஆண்கள், 1,27,855 பெண்கள், 10 இதரர் என 2,54,189 வாக்காளர்கள் என 5,06,522 பேர் உள்ளனர். இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறப்பு என 24,368 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2026 ஜன.1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரை சேர்க்கவும், பெயர், வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை அணுகி ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும்’ என ஆட்சியர் தெரிவித்தார்.

வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்கு முன்பு அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும் இருந்த நிலையில், வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்கு பிறகு அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 24 புதிதாக உருவாக்கப்பட்டு 330 வாக்குச்சாவடிகளும், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 30 புதிதாக உருவாக்கப்பட்டு 320 வாக்குச்சாவடிகளும் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

பெரம்பலூர்: பெரம்பலூர், குன்னம் ஆகிய இரு தொகுதிகளை உள்ளடக்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT