தமிழகம்

உதகை, கொடைக்கானல், குமரிக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: அதி தீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உதகை, கொடைக்கானல், குமரிக்கு சுற்றுலா செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நீர்நிலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், அருவிகளில் குளிப்பதையும், ஆறுகள் மற்றும் அணைகளின் அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்” என்றார்.

ஏற்காட்டுக்கு செல்ல தடை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT