தமிழகம்

வீட்டில் இருந்தே மக்கள் பத்திரப் பதிவு செய்யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ நடைமுறை விரைவில் அமல்

வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

செய்திப்பிரிவு

சென்னை: ப​திவு அலு​வல​கத்​துக்​குச் செல்​லாமல் மக்​கள் இருந்த இடத்​தில் இருந்தே ஆன்​லைனில் ஆவணங்​களை பதிவு செய்​யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ நடை​முறை விரை​வில் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்பட உள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக பதிவுத் துறைத் தலை​வர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஆவணப் பதிவு நடை​முறை​களை எளி​தாக்​கும் வகை​யில் மக்​கள் தாங்​களே நேரடி​யாக இணைய வழி​யில் ஆவணங்​களை பதிவு செய்​யும் முறையை பதிவுத் துறை அறி​முகம் செய்​துள்​ளது. இதன்​மூலம் மக்​கள் சார் பதி​வாளர் அலு​வல​கத்​துக்கு செல்​லாமல், எங்​கிருந்​தும், எப்​போது வேண்​டு​மா​னாலும் (24X7X365) இணை​யதளம் மூலம் இணைய வழி​யில் தங்​கள் ஆவணங்​களைப் பதிவு செய்​து​கொள்ள முடி​யும்.

ஆவணப் பதிவுக்கு சார் பதி​வாளர் ஒப்​புதல் அளித்​ததும், அவரது மின்​னணு கையொப்​பத்​துடன் கூடிய ஆவணம், சம்​பந்​தப்​பட்ட நபரின் உள்​நுழைவுக்​கும், வாட்​ஸ்​அப் எண்​ணுக்​கும் அனுப்​பப்​படும். அவர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

என்னென்ன ஆவணங்கள் பதிவு? - ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ (Anywhere Registration) நடை​முறையை விரை​வில் செயல்​பாட்​டுக்கு கொண்​டுவர உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த வகை​யில், முதல் விற்​பனை மனை (First sale of Plot), முதல் விற்​பனை அடுக்​கு​மாடி குடி​யிருப்பு (First sale of Flat), தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய விற்​பனை ஆவணங்​கள், வங்​கி​களில் பெறும் கடனுக்​கான அடமானம் மற்​றும் ரசீது ஆவணங்​கள் ஆகிய​வற்றை சார் பதி​வாளர் அலு​வல​கத்துக்கு வராமலேயே பதிவு செய்​ய​லாம்.

வங்​கி​கள், கட்​டு​மான நிறு​வனங்​கள், பொது​மக்​கள், ஆவண எழுத்​தர்​கள், வழக்​கறிஞர்​கள் ஆகியோர் பதிவுத் துறை இணை​யதளத்​தில் தங்​களது உள்​நுழைவை உரு​வாக்​கி, ஆவணங்​களை (ரசீது) இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கலாம். ஆவணத்தை எழு​திக் கொடுப்​பவர்​கள், எழு​திப் பெறு​பவர்​கள், சாட்​சிகள் ஆகிய அனை​வரது ஆதார் அட்​டையை பதிவேற்​றம் செய்​ய​வேண்​டும். ஆதார் ஆணை​யம் மூலம் கைரேகை அல்​லது கரு​விழி படலம் வாயி​லாக ஆதார் சரி​பார்க்​கப்பட வேண்​டும். இதற்கு இணைய இணைப்​பு, யுஐடிஏஐ (UIDAI) ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட எல்-1 விரல் ரேகை இயந்​திரம், கரு​விழிப் படலம் கவரும் கரு​வி, புகைப்​படக் கருவி (Webcam) ஆகியவை வேண்​டும்.

ஆன்​லைன் ஆவணப் பதிவு முறை​யில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால், ஹார்​டு​வேர் பிரச்​சினைக்கு முகமது யூனுஸ் (7397574067), அருண்​கு​மார் (9940446694) ஆகியோரை​யும், சாப்ட்​வேர் பிரச்​சினைக்கு சீனி​வாஸ் கணேஷ் (6369798973), டில்லி பாபு (8525805957) ஆகியோரை​யும் தொடர்​பு கொள்​ளலாம்​ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT