சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முதன்மை பயிற்சியாளர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாமை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையரும், மக்கள்தொகை கணக்கெடுப்பு மாநில ஒருங்கிணைப்பு அலுவலருமான பி.சந்திரமோகன் தொடங்கிவைத்தார். | படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின்போது பொதுமக்கள் அளிக்கும் விவரங்களை பகிரக் கூடாது: கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பின்​போது பொது​மக்​கள் அளிக்​கும் விவரங்​களை தனிப்​பட்ட முறை​யில் யாருடனும் பகிர்ந்து கொள்​ளக் கூடாது என கணக்​கெடுப்​பாளர்​களுக்கு மாநில ஒருங்​கிணைப்பு அலு​வலர் பி.சந்​திரமோகன் அறி​வுரை வழங்​கினார்.

தமிழ்​நாடு மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு இயக்​குநரகம் சார்​பில் கணக்​கெடுப்பு முதன்மை பயிற்​சி​யாளர்​களுக்​கான 4 நாள் பயிற்சி முகாம் சென்னை தரமணி​யில் உள்ள தேசிய தொழில்​நுட்ப ஆசி​ரியர் பயிற்சி நிறு​வன வளாகத்​தில் நேற்று தொடங்​கியது.

இம்​முகாமை தமிழக அரசின் வரு​வாய் நிர்​வாக ஆணை​யரும், மக்​கள் ​தொகை கணக்​கெடுப்பு மாநில ஒருங்​கிணைப்பு அலு​வலரு​மான பி.சந்​திரமோகன் தொடங்கி​வைத்து பேசிய​தாவது: மக்கள்தொகை கணக்​கெடுப்பு தற்​போது முதல்​முறை​யாக 100 சதவீதம் டிஜிட்​டல் முறை​யில் நடை​பெறுகிறது.

கணக்​கெடுப்​பாளர்​கள் பதிவுசெய்​யும் ‘இன்​புட்’ உள்​ளடக்​கத்​துக்கு ஏற்​பவே ‘அவுட்​புட்’ கிடைக்​கும். தகவல்​களின் துல்​லியம் மிகவும் முக்​கிய​மானது.

எனவே, இப்​பணி​யில் ஈடு​படும் அலு​வலர்​கள் பொறுப்பை உணர்ந்து செயல்​பட வேண்​டும். மேலும், 2-வது கட்ட கணக்​கெடுப்பு பணி​யில் பொது​மக்​களின் தனிப்​பட்ட விவரங்​கள் தொடர்​பான தகவல்​களை சேகரிக்க வேண்​டி​யிருக்​கும்.

எனவே, கணக்​கெடுப்​பாளர்​கள் மிகவும் கவனமுடன் பணி​யாற்ற வேண்​டும். தகவல்​களை தனி்ப்​பட்ட முறை​யில் யாருடனும் பகிரக்​கூடாது. வழிகாட்டு நெறி​முறைகளை தவறாமல் பின்​பற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

தமிழ்​நாடு மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு இயக்​குநர் எம்.சுந்​தரேஷ்பாபு பேசிய​தாவது: ஆகஸ்ட் 1 முதல் 30-ம் தேதி வரை நடை​பெற்ற மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு முதல்​கட்ட பணி​யின்​போது பொது​மக்​களிடம் 33 வித​மான கேள்​வி​கள் கேட்​கப்​பட்டு விவரங்​கள் சேகரிக்​கப்​பட்​டன.

2-வது கட்ட களப்​பணி ஜன.25 முதல் பிப். 28 வரை நடை​பெற உள்​ளது. இதில் 40 கேள்​வி​களுக்கு பொது​மக்​கள் விவரங்​களை அளிக்க வேண்​டும்.

இந்​தக் கால​க்கட்​டத்​தில் தகவல்​களை அளிக்க தவறிய​வர்​களுக்கு மார்ச் 1 முதல் 5 வரை கால அவகாசம் அளிக்​கப்​படும். இந்த 4 நாள் பயிற்சி முகாமில் தமிழகத்​தைச் சேர்ந்த 160 முதன்மை பயிற்​சி​யாளர்​களுக்​கும், புதுச்​சேரியைச் சேர்ந்த 4 பேருக்​கு்ம் பயிற்சி அளிக்​கப்​பட உள்​ளது.

இவர்​கள் மூலம் 3 ஆயிரம் களப்​பணி​யாளர்​களுக்​கும் அவர்​கள் மூலமாக 1.4 லட்​சம் கணக்​கெடுப்​பாளர்​கள், 20 ஆயிரம் மேற்​பார்​வை​யாளர்​களுக்​கும் பயிற்சி அளிக்​கப்​படும்.

இதில் சாதி உள்​ளிட்ட தனிப்​பட்ட விவரங்கள் தொடர்​பான கேள்​வி​கள் இடம்​பெறு​வ​தால் கணக்​கெடுப்​பாளர்​கள் கவனத்​துடனும் பொறுப்புணர்​வுடனும் செயல்பட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT