தமிழகம்

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன தமிழர்களை கண்டறிய 3 இடங்களில் டிஎன்ஏ பரிசோதனை

தமிழக அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: நே​பாள பெரு​வெள்​ளத்​தில் காணா​மல் போன தமிழர்​களை அடை​யாளம் காண ​சென்​னை, மதுரை, தஞ்​சாவூரில் இலவச டிஎன்ஏ பரிசோதனைக்கு தமிழகஅரசு ஏற்​பாடு செய்​துள்​ளது.

தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நேபாள பெரு​வெள்​ளத்​தில் காணா​மல் போன தமிழர்​களை அடை​யாளம் காண்​ப​தற்கு ஏது​வாக அவர்​களின் முதல்​நிலை உறவினர்​களான தாய், தந்​தை, மகன் அல்​லது மகள் ஆகியோர் சென்​னை, மதுரை மற்​றும் தஞ்​சாவூரில் உள்ள மண்டல தடய அறி​வியல் ஆய்​வகங்​கள் மூலம் கட்​ட​ணமின்றி டிஎன்ஏ பரிசோதனை செய்​து​கொள்​ளலாம். மாவட்ட ஆட்​சி​யர்​கள் இதற்​கான ஏற்​பாடு​களைச் செய்​து, விவரங்​களை நேபாள அரசு இணை​யதளத்​தில் பதிவேற்​று​வார்​கள்.

சென்னை மண்​டலத்​தில் மயி​லாப்​பூர் தடய அறி​வியல் துறை இயக்​குநர் காஜா மொய்​தீன்– 9941464808, மதுரை மண்​டலத்​தில் மதுரை மருத்​து​வக் கல்​லூரி துணை இயக்​குநர் விஜயேந்​திரன்– 8637674451, தஞ்​சாவூர் மண்​டலத்​தில் வல்​லம் சாலை பிள்​ளை​யார்​பட்​டி​ துணை இயக்​குநர் ராஜ்மோகன்- 9791112894 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

உறவினர்​கள் நேபாளம் செல்​லத் தேவை​யான உதவி​கள், கூடு​தல் விவரங்​களுக்கு சேப்​பாக்​கத்​தில் உள்ள அயல​கத் தமிழர் நலன், மறு​வாழ்​வுத்​துறை ஆணை​யரகத்​தி​லும் 18003093793 / 8069009901 / 8069009900 என்ற தொலைபேசி எண்களி​லும் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT