அண்ணா அறிவாலயம்

 
தமிழகம்

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்து அக்.31-ல் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

தமிழினி

சென்னை: சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அக்., 31 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக மகளிர் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கெட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.

ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 31.10.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அந்தந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதற்கான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுவார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT