சென்னை: “அரசியல் புரட்சி, அரசியல் மாற்றம் என விஜய் பேசுவது எல்லாம் ஏமாற்று வேலைதான்” என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் நேற்று புதுச்சேரி மாநாட்டில் பேசும்போது, திமுகவை நம்பாதீர்கள். அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள் என்று விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்து திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘துணைநிலை ஆளுநரை வைத்து புதிய கல்விக் கொள்கை ஏற்பு, ரேசன் கடை மூடல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் திணிப்பு, நியமன எம்எல்வு-க்கு அதிகாரம், இந்தி திணிப்பு என முதல்வரை இயங்கவிடாது புதுச்சேரியை பாஜக நாசம் செய்துவருகிறது.
ஆனால், இதற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைகூட உச்சரிக்காத விஜய் தான் பாஜகவை எதிர்க்கிராறாம். விஜய்க்கு வந்து இருப்பது கருப்பு சிவப்பு நிற ஒவ்வாமை நோய். அதற்கு நல்ல மருத்துவரை பார்த்தால் சரியாகும் அதைவிட்டுவிட்டு அரசியல் புரட்சி, அரசியல் மாற்றம் என பேசுவது எல்லாம் ஏமாற்று தான்” என்று கூறியுள்ளார்.