படம்:எஸ்.சத்தியசீலன்

தமிழகம்

தவெக அமைச்சர் சரத்குமாரை நீக்க வலியுறுத்தி தடையை மீறி திமுக மாணவரணி போராட்டம்: முன்னாள் அமைச்சர்கள் கைது

மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: அமைச்​சர் டி.சரத்​கு​மாரை போதைப்​பொருள் சர்ச்​சை​யின் கீழ் பதவியி​லிருந்து நீக்க வலி​யுறுத்தி திமுக மாணவர் அணி சார்​பில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது. சென்​னை​யில் தடையை மீறி கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட முன்​னாள் அமைச்​சர்​கள் மா. சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, மேயர் பிரியா உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழக மனிதவள மேலாண்​மைத் துறை அமைச்​சர் டி.சரத்​கு​மார், போதைப்​பொருள் பயன்​படுத்​தி​யது போன்ற வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி பெரும் சர்ச்​சை​யானது. இதையடுத்து அவரை பதவியி​லிருந்து நீக்​கக் கோரி, திமுக மாணவரணி கண்டன ஆர்ப்​பாட்​டத்தை அறி​வித்​தது.

இதற்​காக எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அரு​கில் திமுக​வினர் நேற்று மேடை அமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது அங்கு வந்த போலீ​ஸார், ‘போ​ராட்​டத்​துக்கு 5 நாட்​களுக்கு முன்பே அனு​மதி பெற வேண்​டும்’ எனக் கூறி பணி​களைத் தடுத்து நிறுத்​தினர்.

இதற்கு திமுக நிர்​வாகி​கள் எதிர்ப்பு தெரிவிக்​கவே, இருதரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. பிறகு அவர்களை போலீ​ஸார் குண்​டுக்​கட்​டாக கைது செய்​தனர். இதைத் தொடர்ந்​து, முன்​னாள் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தலை​மை​யில் 100-க்​கும் மேற்​பட்ட திமுக​வினர் சம்பவ இடத்​துக்​குத் திரண்டு வந்​தனர்.

போலீ​ஸாரின் தடையை​யும் மீறி, சரத்​கு​மார் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் பேசிய மா.சுப்​பிரமணி​யன், ``அமைச்​சர் தனது செல்​போன் மீது கார்டை வைத்து பவுடரை நசுக்​கு​வதும், கையில் 500 ரூபாய் நோட்டை மடித்து வைத்​திருந்த பாணி​யும், உயர்ரக போதைப்​பொருள் பயன்​படுத்​துபவர்​கள் உபயோகிக்​கும் நுகர்வு முறை​யாகும்.

ஆனால், இதற்​குப் பதிலளித்த அமைச்​சர், `பிறந்து சில நாட்​களே ஆன தன் குழந்​தைக்கு மாத்​திரை நசுக்​கினேன்' என்​கிறார். ஆனால் அவரது மனை​வியோ, `ஒன்​றரை வயது குழந்​தைக்​குப் பால் கொடுக்​கச் சென்​ற​போது மாத்​திரையை நசுக்​கி​னார்' என்று முரண்​பா​டாக் கூறுகிறார். எனவே அமைச்​சர் மீது சட்​டப்​பூர்வ நடவடிக்​கை​யும் எடுக்க வேண்​டும்" என்​றார்.

முன்​னாள் அமைச்​சர் பி.கே. சேகர்​பாபு கூறும்​போது, ``சம்​பந்​தப்​பட்ட அமைச்​சரை உடனடி​யாகப் பதவி நீக்​கம் செய்​து, மருத்​து​வப் பரிசோதனைக்கு உட்​படுத்த வேண்​டும். அவர் `கொக்​கைன்' உபயோகப்படுத்தியிருக்கிறாரா என்று ஆய்வறிக்கை கோர வேண்டும்'' என்றார். இதேபோல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஸ்டாலின் கண்டனம் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பதிவில், ``போதைப் பொருள் பயன்படுத்தியதுபோல், ‘தக் லைப் ஸ்டோரி’ போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த திமுகவினர் கைது; தவெக ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு; எ.வ.வேலு வீட்டில்ரெய்டு... இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதல்வரின் எண்ணம் நீடிக்காது'' என்றார்.

SCROLL FOR NEXT