வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி, திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன் விழா வளைவு அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மா.சுப்பிரமணியன். துணை மேயர் மகேஷ்குமார். சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். | படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

பருவமழை முன்னேற்பாடுகளில் அலட்சியம்: தமிழக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: வடகிழக்​குப் பருவமழையின் தீவிர அபா​யங்​களை தமிழக அரசு அலட்​சி​யப்​படுத்தி வரு​வ​தாகக் கூறி, சென்​னை​யில் திமுக சார்​பில் கண்டன ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன.

சைதாப்​பேட்டையில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி தலைமை தாங்​கி​னார். அவர் பேசி​ய​தாவது: மார்ச், ஏப்​ரல், மே மாதத்​தில் வெயில் கடுமை​யாக இருக்​கும். எல்​லோரும் மின்​சா​ரம் அதி​க​மாகப் பயன்​படுத்​து​வார்​கள்.

இதனால் கடந்த நவம்​பரில் அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி, ஒரு யூனிட் ரூ.20-க்கு வாங்​கு​வதற்கு எல்லா வேலை​யும் செய்​து​விட்டு வந்​தார். ஆனால் ‘ஆதவ் அர்​ஜு​னா’ கம்​பெனி அந்த டெண்​டரை ரத்து செய்​து​விட்​டது. அந்த டெண்​டரை செயல்​படுத்​தி​யிருந்​தால் இந்த 3 மாதத்​தில் சென்​னை​யில் மின்​தடை வந்​திருக்​காது.

ஆந்​தி​ரா​வுக்​குப் போய் ஒரு யூனிட் ரூ.37-க்கு வாங்​கு​வதன் மூலம் இந்த அரசாங்​கத்​திற்கு ஒரு லட்​சம் கோடி நஷ்டம் வரு​கிறது. மக்​கள் இவர்​களைப் பற்​றித் தெரிந்​து​கொண்டு விட்​டார்​கள். இதை இரண்டு தொகுதி இடைத்​தேர்​தலில் பார்த்​தோம். ஏழரை நாட்​டுச் சனி நம்மை விட்டு ஓடிப் போயிருச்​சு.

அந்த சனியன்​களைச் சுமந்​தது​னால​தான் நாம் கோட்​டைக்​குப் போக முடியல. அவர்​களுக்​குக் கொடுத்த சீட்​டில் நாம் நின்​றிருந்​தால் வெற்​றி​பெற்று ஆட்​சிக்கு வந்​திருப்​போம். இதை தாராபுரத்​தி​லும், மது​ராந்​தகத்​தி​லும் மக்​கள் வெட்​ட​வெளிச்​ச​மாக காட்​டி​விட்​டார்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு மேயர் பிரி​யா, தலைமை வகித்​துப் பேசுகை​யில், “தவெக அரசு சென்னை மாநக​ராட்​சியை முற்​றி​லும் புறக்​கணித்​துள்​ளது. கிட்​டத்​தட்ட ரூ.700 கோடி பணி​களை ரத்து செய்துள்ளன” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT