அரியலூர்: தவெக அமைச்சரவையில் உள்ள அனைவருமே ஜோக்கர்கள் தான் என்றும், நிழல் முதல்வர் போல ஆதவ் அர்ஜூனா செயல்படுகிறார் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம் செய்தார்.
அரியலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அரியலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியது:
இந்த தேர்தல் தோல்வி, குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்வி திமுகவினரின் ஆழ்மனதில் மாறா வடுவாக பதிந்துள்ளது. ஆனாலும் நாம் பார்க்காத தோல்வி அல்ல. இந்த தோல்வியை, திமுக இன்னும் வேகமாக மீண்டு வருவதற்கான வாய்ப்பாகத் தான் நாம் பார்க்க வேண்டும்.
இந்த ஆட்சி மாற்றம், ஏதோ பெரிய மாற்றம் அல்ல. இந்த ஆட்சி மாற்றம் நீடித்து நிலைக்காது. தவெகவில் முதல்வர் விஜய் அல்ல. ஆதவ் அர்ஜுனா தான் நிழல் முதல்வர் போல செயல்படுகிறார். 13 சீட்டும் ஜோக்கர் ஆக உள்ளது போல, தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவருமே ஜோக்கர்கள் போலத்தான் உள்ளனர். அமைச்சர்களுக்கு 2 மாதம் பேச பயிற்சி தந்து அதன் பிறகு அமைச்சரவையில் வாய்ப்பு அளித்திருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.