பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் திமுக மாணவர் அணி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 
தமிழகம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட திமுக சார்பில் உதவி மையம்

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்​களின் உயர்​கல்விக்கு வழி​காட்​டும் வகை​யில் திமுக மாணவர் அணி சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள சிறப்பு உதவி மையத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்​டில் பிளஸ் 2 முடித்து கல்​லூரி​களில் முதலாண்டு சேர உள்ள மாணவர்​களுக்கு உதவும் வகை​யில், சென்னை அறி​வால​யத்​தில் திமுக மாணவர் அணி சார்​பில் சிறப்பு உதவி மையம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மையத்தை கட்​சித் தலை​வரும், முதல்​வரு​மான ஸ்டா​லின் நேற்று காலை தொடங்கி வைத்​தார்.

உயர்​கல்வி தொடர்​பாக மாணவர்​களுக்​குத் தேவை​யான ஆலோ​சனை​கள், உதவி​களை தாமதமின்றி வழங்​கு​மாறு மையத்​தின் பொறுப்​பாளர்​களுக்கு அவர் அறி​வுறுத்​தி​னார். அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், டிஆர்​பி. ராஜா, ஆ.ராசா எம்​.பி. அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, செய்​தித் தொடர்பு தலை​வர் டிகேஎஸ். இளங்​கோவன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் உடன் இருந்​தனர்.

செய்​தி​யாளர்​களிடம் திமுக மாணவர் அணிச் செய​லா​ளர் வீரமணி கூறிய​போது, “பிளஸ் 2 முடித்து கல்​லூரி​யில் சேர விரும்​பும் மாணவர்​களுக்கு சிறப்பு உதவி மையம் மூலம் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​படும். கட்​சிப் பாகு​பாடின்றி அனைத்து மாணவர்​களும் பயன்​பெறும் வகை​யில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. தமிழகம் முழு​வதும் இந்த பணி​யில் மாணவர் அணி​யைச் சேர்ந்த 500 பேர் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்” என்​றார்.

SCROLL FOR NEXT