கோப்புப் படம்

 
தமிழகம்

ஸ்ரீரங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் 5 வாக்கு மட்டுமே பெற்ற திமுக: நிர்வாகிகள் கூட வாக்களிக்கவில்லையா?

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்​கம் தொகு​தி​யில் ஒரு வாக்​குச்​சாவடி​யில் திமுக​வுக்கு 5 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. அங்கு கட்​சி​யின் பூத் கமிட்டி நிர்​வாகி​களாக 14 பேர் உள்ள நிலை​யில், அவர்​கள் கூட திமுக​வுக்கு வாக்​களிக்​கவில்லை என்​பது தெரிய​வந்​துள்​ள​தால் கட்​சியினர் அதிர்ச்​சி​யடைந்​து உள்​ளனர்.

ஸ்ரீரங்​கம் தொகு​தி​யில் திமுக சார்​பில் எஸ்​.துரை​ராஜ், அதி​முக சார்​பில் ஆர்​.மனோகரன், தவெக சார்​பில் ரமேஷ் உட்பட 21 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டனர். இதில், தவெக வேட்​பாளர் ரமேஷ் 1,03,235 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். திமுக துரை​ராஜ் 69,645 வாக்​கு​களும், அதி​முக மனோகரன் 65,819 வாக்​கு​களும் பெற்​றனர்.

இந்​நிலை​யில், இந்​தத் தொகு​தி​யில் வாக்​குச்​சாவடி வாரி​யாக கட்​சிகள் பெற்ற வாக்​கு​கள் விவரம் வெளி​யானது. இதில், ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91-வது வாக்​குச்​சாவடி​யில் திமுக வேட்​பாளருக்கு 5 வாக்​குகள் மட்​டுமே கிடைத்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இது திமுக​வினரிடையே கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. இங்கு அதி​முக​வுக்கு 236 வாக்​கு​களும், தவெக​வுக்கு 51 வாக்​கு​களும் கிடைத்​துள்​ளன.

இதே​போல, 87-வது வாக்​குச் ​சாவடி​யில் திமுக​வுக்கு 42 வாக்​கு​களும் 93-வது வாக்​குச்​சாவடி​யில் 41 வாக்​கு​களும் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இது திமுக​வினரிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து திமுக நிர்​வாகி​கள் கூறும்​போது, “தி​முக​வில் வாக்​குச்​சாவடி முகவர்​கள், பூத் கமிட்டி உறுப்​பினர்​கள், இளைஞரணி நிர்​வாகி, மகளிரணி நிர்​வாகி என ஒவ்​வொரு வாக்​குச்​சாவடிக்கும் தலா 14 பேர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். ஆனால், திமுக​வுக்கு 5 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளது அதிர்ச்​சி​யளிக்​கிறது. கட்​சி​யின் பூத் கமிட்டி நிர்​வாகி​களே வாக்​களிக்​க​வில்லை என்​பது தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து கட்சி தலைமை விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார். இதுகுறித்து மத்​திய மாவட்ட திமுக செய​லா​ளர் வைரமணி​யிடம் கேட்​ட​போது, இதுகுறித்து விசா​ரிக்​கப்​படும் என்​றார்.

SCROLL FOR NEXT