தமிழகம்

நிர்வாக வசதிக்காக மாநில நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு: கடந்த திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்திய தவெக அரசு

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: நிர்வாக வசதிக்காக தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 4 பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்​சி​யில் கொண்​டு ​வரப்​பட்ட இந்த திட்​டத்தை தவெக அரசு தற்​போது செயல்​படுத்தி உள்​ளது.

தமிழகம் முழு​வதும் மாநில நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் சுமார் 70 ஆயிரம் கிமீ தொலை​வுக்கு சாலைகள் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த துறை​யானது, கட்​டு​மானம் மற்​றும் பராமரிப்​பு, நபார்டு மற்​றும் கிராமச் சாலைகள் திட்​டம், திட்​டங்​கள், பெருநகரங்​கள், தரக்​கட்​டுப்பாடு என 5 பிரிவு​களாக இயங்​கியது. சாலைகள் மற்​றும் பாலங்​களை அமைத்​தல், சாலை​யின் தரத்தை ஆய்வு செய்​தல் போன்​றவை இப்​பிரிவு​களின் பிர​தான பணி​களாக இருந்து வந்தன.

இதில், தரக்​கட்​டுப்​பாடு தவிர மற்ற 4 பிரிவு​களுக்​கான தலைமை அலு​வல​கங்​கள் சென்​னை​யில் தனித்தனியே செயல்​பட்டு வந்​தன. இந்த 4 பிரிவு​களிடையே நிர்​வாகச் சிக்​கல், எல்​லைப் பிரச்​சினை, நிதி ஒதுக்கீடு, பணிச்​சுமை ஆகியவற்​றால் சமநிலையற்ற சூழல் ஏற்​பட்​டது. மேலும், பணி​களி​லும் தேக்க நிலை ஏற்​பட்​டது. இதனால், துறையை மேம்​படுத்​தும் வகை​யில், நபார்டு மற்​றும் கிராமச் சாலைகள் திட்​டம், திட்​டங்​கள், பெருநகரங்​கள் ஆகிய 3 பிரிவு​கள் கலைக்​கப்​பட்டு கட்​டு​மானம், பராமரிப்பு பிரி​வின்​கீழ் கொண்டு வரப்​பட்​டுள்​ளன.

கடந்த திமுக ஆட்​சி​யில் இதற்​கான திட்​டம் வகுக்​கப்​பட்​டு, அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டது. தற்​போது, இத்​திட்​டத்​துக்கு தவெக அரசும் அனு​மதி அளித்​துள்​ள​தால், புதிய அலு​வல​கங்​களை உரு​வாக்​குதல், சாலை எல்லை பிரித்​தல் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

இதுகுறித்து நெடுஞ்​சாலைத் துறை பொறி​யாளர்​கள் கூறிய​தாவது: தரக்​கட்​டுப்​பாடு தவிர மற்ற 4 பிரிவு​களும் ஒரே குடை​யின் கீழ் தலை​மைப் பொறி​யாளர் அலு​வல​கங்​கள் கட்​டு​மானம் மற்​றும் பராமரிப்பு எனும் பெயரில் சென்​னை, திருச்​சி, மதுரை மற்​றும் கோவை ஆகிய 4 புதிய மண்டல அலு​வல​கங்களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இதனால், கோப்​பு​கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முடி​யும். கடந்த ஆட்​சி​யில் கொண்டு வரப்​பட்டதிட்​டம் என்​றாலும், மக்​கள் நலன் கருதி அதை இந்த அரசும் அமல்​படுத்​தி​யது வரவேற்​கத்​தக்​கது. இவ்வாறு கூறினர்.

SCROLL FOR NEXT