தமிழகம்

கனிமொழி தலைமையில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: திமுக தலைமை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கொலை, கொள்ளை, போதைப்​பொருள் விற்​பனை ஆகியவை பெரு​மளவில் அதி​கரித்​துச் சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது.

தவெக அரசைக் கண்​டித்து வரும் 31-ம் தேதி அனைத்து மாவட்​டத் தலைநகரங்​களி​லும் திமுக மகளிர் அணி சார்​பில் மாபெரும் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்.

அதன்​படி சென்னை வடக்​கில் கனிமொழி எம்.பி. வனிதா குமாரியும் சென்னை தெற்​கில் விஜயா தாயன்​பன், கனி​மொழி சோமு ஆகியோ​ரும் கலந்​து​கொள்​கின்​றனர்.

தூத்​துக்​குடி​யில் கீதா ஜீவன், கோவை​யில் வீரமணி, திருச்​சி​யில் விஜிலா சத்​யானந்த், மதுரையில் பவானி ராஜேந்​திரன் கண்​டன உரையாற்​றுகின்​றனர்.

அனைத்து மாவட்​டத் தலைநகரங்​களி​லும் மகளிர் அணி​யினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​படு​கின்​றனர். இவ்​வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT