தமிழகம்

கரூர் நெரிசல் வழக்கு சாட்சிகளை அச்சுறுத்துகிறார் முதல்வர் விஜய்: உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழுவுக்கு திமுக மனு

செய்திப்பிரிவு

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு வழக்கு விசா​ரணையை கண்​காணிக்க உச்ச நீதி​மன்​றத்​தால் நியமிக்​கப்​பட்ட ஓய்​வு​பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மையி​லான கண்​காணிப்​புக் குழு​விடம் திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி அளித்​துள்ள மனு​வில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த ஜூலை 10-ம் தேதி கரூரில் பேசிய முதல்​வர் விஜய்,இந்த துயர சம்​பவத்​துக்கு கரூர் காவல்​துறையே முழு பொறுப்பு என்​பது போல​வும், இதன் பின்​னணி​யில் அரசி​யல் சதி இருப்​பது போல​வும் பேசி​யுள்​ளார்.

இந்த வழக்​கின் முக்​கிய சாட்​சிகளாக இருக்​கும் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினர் முன்​னிலை​யிலேயே இந்த உரை நிகழ்த்​தப்​பட்​டுள்​ளது. தமிழக அரசின் உள்​துறைச் செய​லா​ளர். டிஜிபி ஆகியோர் ஏற்​கெனவே உச்சநீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள எதிர் ஆவணத்​தில், ‘தவெக அமைப்​பாளர்​களின் திட்​ட​மிடப்​ப​டாத செயல்​பாடு​களும், விதி​மீறல்​களுமே இந்த விபத்​துக்கு காரணம்’ என்று பூர்​வாங்க விசா​ரணை​யின் அடிப்​படை​யில் தெளி​வாகக் குறிப்​பிட்​டுள்​ளனர்.

ஆனால், அதே உள்​துறையை தன் வசம் வைத்​துள்ள முதல்​வர், அதற்கு முற்​றி​லும் முரணாக பொது​வெளி​யில் பேசிசாட்​சிகளை திசை​திருப்ப முயல்​கிறார். இவ்​வழக்​கில் தவெக நிர்​வாகி​கள், அமைச்​சர்​கள் உள்​ளிட்ட முக்​கிய நபர்​கள் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் இது​வரை கைது செய்​யப்​ப​டாத​தால், சாட்​சிகளை சிதைக்​கக் கூடாது என்ற நீதி​மன்ற கட்​டுப்​பாடு​கள் எது​வும் அவர்​கள் மீது விதிக்​கப்​பட​வில்​லை.

எனவே, இந்த விவ​காரத்​தில் முதல்​வர் விஜய் ஆற்​றிய உரை குறித்து சிபிஐ தனி புகார் பதிவு செய்ய உத்​தர​விட வேண்​டும். குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​களை சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜராகச் செய்​து, சாட்​சிகளை அச்​சுறுத்​தக் கூடாது என்ற நிபந்​தனை​யுடன் கூடிய பிணைப் பத்​திரங்​களை எழுதி வாங்க சிபிஐ-க்கு உத்​தர​விட வேண்​டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT