சென்னை: சட்டப்பேரவையில் தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பேசியதாவது: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வருகிறார். ஒரு சட்டப்பூர்வமான அமைப்பின் உயர் பதவியில் இருப்பவர் அரசியல் தொடர்பான கருத்துகளை விவாதங்களில் பேசக்கூடாது, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் விவாதங்களில் பங்கேற்பதை தொடர விரும்பினால், அந்த பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும். அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்: பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பது அவரது தனிப்பட்ட விருப்பம்.
அதில் சட்டப்பூர்வமாக ஏதாவது தவறு இருந்தால் விவாதிக்கலாம். பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்: சட்டப்பூர்வ அமைப்புக்கும், வாரிய தலைவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆஸ்டின் சொல்வதை கவனத்தில் கொண்டு, ஆய்வு செய்யலாம்.