தமிழகம்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: சி.வி.சண்முகம் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமி​ழ​கத்​தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்​ஒதுக்​கீடு விவ​காரத்​தில் அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் வைத்த குற்​றச்​சாட்​டால் சட்​டப்​பேர​வை​யில் சலசலப்பு ஏற்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் வன்​னியர்​களுக்​கான 10.5 சதவீத உள்​ஒதுக்​கீடு விவ​காரம் குறித்து விவாதம் நேற்று நடை​பெற்​றது. அதன் விவரம் வரு​மாறு:

எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் (தி​முக): திமுக தலை​வர் குடும்​பத்​தின் உறவினர் ஒரு​வர்​தான் வன்​னியர் 10.5 சதவீத ஒதுக்​கீடு விவ​காரத்​தில் இடையூறாக நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​த​தாக சி.​வி.சண்​முகம் தெரி​வித்​தார். அதை அவைக்​குறிப்​பில் இருந்து நீக்க வேண்​டும்.

திமுக கொறடா எ.வ.வேலு: சட்​டப் பாது​காப்​போடு வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்​பது​தான் திமுக​வின் அழுத்​த​மான முடிவு.

சி.​வி.சண்​முகம் (அதி​முக): வன்​னியர்​களுக்​கான இடஒதுக்​கீட்டை தரக்​கூ​டாது என்று நான் குறிப்​பிட்​ட​வர் பெயரில்​தான், மதுரை உயர் நீதி​மன்ற கிளை​யில் வழக்கு தொடுக்​கப்​பட்​டு, வெற்றி பெறப்​பட்​டது.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி: அதி​முக ஆட்​சிக்​காலத்​தில் 10.5 சதவீதம் ஒதுக்​கீடு வழங்​கப்​பட்​டது. ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு​வும் அமைக்​கப்​பட்​டது. ஆனால், 2021 ஆட்சி மாற்​றத்​துக்​குபின், அந்த அரசு காலஅவ​காசத்தை நீட்​டிக்​க​வில்​லை. அப்​படி செய்​திருந்​தால், வன்​னியருக்கு 10.5 சதவீத ஒதுக்​கீடு கிடைத்​திருக்​கும்.

மெய்​ய​நாதன் (தி​முக): தலை​வர் குடும்​பத்​தைச் சார்ந்​தவர் வழக்கு போட்​ட​தாக உண்​மைக்குப் புறம்​பான செய்​தியை சொல்​கி​றார்​கள். வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு பெற்​றுத்​தரு​வ​தில் முதல் களப் போராளி​யாக இருந்​தது திமுக

கணேஷ்கு​மார் (பாமக): சாதி​வாரி கணக்​கெடுப்​புக்​கும் 10.5 சதவீத இடஒதுக்​கீட்​டுக்​கும் சம்​பந்​தம் இல்​லை. உச்ச நீதி​மன்​றம் கேட்​கும் தரவு​களை மாநில அரசு வழங்​காத​தால் மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சி.​வி.சண்​முகம்: திமுக முன்​​னாள் அமைச்​சர் கூறு​வது சரி. எனவே, நான் சொன்ன குற்​றச்​​சாட்டை திரும்ப பெற்​றுக்​கொள்​கிறேன். இவ்​​வாறு விவாதம் நடைபெற்​றது.

SCROLL FOR NEXT