தமிழகம்

குதிரை பேர விவகாரத்தில் தவெக அரசின் நடவடிக்கை குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்: திமுக மீண்டும் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: எதிர்க்​கட்சி எம்​எல்​ஏக்​களை ராஜி​னாமா செய்ய வைக்க ஆளும்​கட்சி திட்​ட​மிட்ட செயல்​பாடு​களை மேற்​கொள்​கிறது. எனவே, வைகோ, எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரின் பகிரங்க வாக்​குமூலங்​கள் அடிப்​படை​யில், உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இதில் எஃப்​ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று லஞ்ச ஒழிப்​புத் துறை​யில் திமுக மீண்​டும் மனு அளித்​துள்​ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்​புத்துறை இயக்​குநருக்கு திமுக முதன்​மைச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி அனுப்​பி​யுள்ள புகாரில் கூறி​யிருப்​ப​தாவது:

‘சட்ட விரோத தூண்​டு​தல்​கள், அரசி​யல் வாக்​குறு​தி​கள், ஊழல் நடை​முறை​கள் மூலம் திமுக எம்​எல்​ஏக்​களை ராஜி​னாமா செய்ய வைப்​ப​தற்​காக முதல்​வர் விஜய், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ இணைந்து மேற்​கொண்​ட​தாகக் கூறப்​படும் குற்​றச் சதி குறித்து எஃப்​ஐஆர் பதிவு செய்து முழு​மை​யான விசா​ரணை தொடங்க வேண்​டும்’ என்று ஏற்​கெனவே அளித்த புகாரில் கோரி​யிருந்​தேன்.

பிறகு, திமுக எம்​எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதி​ரான சட்ட விரோத கைது, காவல் துறை கட்​டாயப்​படுத்​துதல்​கள் குறித்து ஆளுநரிடம் தனி மனுவை சமர்ப்​பித்​தோம்.

அதில், ‘காவல் துறை​யினர் தங்​கள் அதி​காரத்​தை​யும், அரசு இயந்​திரத்​தை​யும் துஷ்பிரயோகம் செய்​து, அவரை பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணை​யு​மாறு வற்​புறுத்​தினர்’ என்று குறிப்​பிட்​டிருந்​தோம்.

இந்​நிலை​யில், அதி​முக எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்த எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஜூலை 2-ம் தேதி நடத்​திய செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில்,“ஆளும்​கட்சி என்னை அணுகியது.

ராஜி​னா​மா​வைத் தொடர்ந்து அக்​கட்​சி​யில் இணை ​யப் போகிறேன்” என்று பகிரங்​க​மாக ஒப்​புக்​கொண்​டுள்​ளார். முந்​தைய புகாரில் கூறப்​பட்​டுள்ள அதே பாணி​யில் ராஜி​னாமா செய்த ஒரு எம்​எல்​ஏ​வின் இந்த வாக்​குமூலம், ஆளும்​கட்​சி​யால் மேற்​கொள்​ளப்​பட்ட தூண்​டு​தல்​களுக்கு நேரடி மற்​றும் முதல்​நிலை ஆதா​ர​மாக அமை​கிறது.

இதன்​மூலம், அரசி​யலமைப்​பு, தேர்​தல் வழி​முறை​களுக்கு மாறாக, சட்​டப்​பேர​வை​யின் கட்​டமைப்பை மாற்ற 2 முக்​கிய உத்​தி​கள் கொண்ட திட்​ட​மிட்ட செயல்​பாட்டை ஆளும்​கட்சி கையாள்​வது தெளி​வாகிறது.

முதலா​வ​தாக, ராஜி​னாமா செய்ய ஒப்​புக்​கொள்​ளும் எம்​எல்​ஏக்​களுக்கு தேர்​தல் ஆதர​வு, நிதி உதவி, அரசாங்க சலுகைகள் போன்ற வாக்​குறு​தி​கள் மூலம் தூண்​டு​தல் அளிப்​பது; இரண்​டாவ​தாக, மறுப்​பவர்​கள் மீது குற்ற வழக்​கு​களைப் பதிவு செய்​து, கைது நடவடிக்கை மூலம் மிரட்​டல் விடுப்​பது. இந்த 2 வழிகளும் பிர​தி​நி​தித்​துவ ஜனநாயகத்​தின் அடித்​தளத்​தையே தாக்​கு​கின்​றன.

வாக்​காளர்​களின் தீர்ப்பை நிராகரிக்​கின்​றன. அரசியலமைப்​பின் 10-வது அட்​ட​வணை​யின்​கீழ் உள்ள கட்​சித்​தாவல் தடைச் சட்​டத்​தின் கட்​டமைப்பை சீர்​குலைக்​கின்​றன.

‘ஒரு தகவல் அறிக்கை மூலம் புல​னாகும் குற்​றம் நடந்​திருப்​பது தெரிய​வந்​தால், எஃப்​ஐஆர் பதிவு செய்​வது கட்​டா​யம். சம்​பந்​தப்​பட்ட நபர்​களின் அந்​தஸ்​து, செல்​வாக்கு அடிப்​படை​யில் இதில் எந்த விதி​விலக்​கும் கிடை​யாது’ என்று லலிதா குமாரி - உத்தர பிரதேச அரசு இடையி​லான வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் தெளி​வாக தீர்ப்​பளித்​துள்​ளது.

தற்​போது ஆவணங்​களாகச் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்ள வைகோ, எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோரின் பகிரங்க வாக்​குமூலங்​கள், ஒட்​டுமொத்​த​மாக முதல் தகவல் அறிக்கைபதிவு செய்​யப்பட வேண்​டியபுல​னாகும் குற்​றங்​களை வெளிப்படுத்​துகின்​றன.

எனவே, உச்சநீதி​மன்​றத் தீர்ப்​பின்​படி உடனடி​யாக எஃப்​ஐஆர் பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி உண்​மையை வெளிக்​கொண்டுவந்து, இதற்​குப் பொறுப்​பான அனை​வரை​யும் சட்​டத்​தின் முன் நிறுத்​த​ வேண்டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT