தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடத்துங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலை தமிழகத்​துடன் இணைத்து நடத்​தக்​கோரி தலை​மைத் தேர்தல் ஆணை​யத்​துக்கு திமுக கடிதம் அனுப்​பி​யுள்ளது.

இதுதொடர்பாக புதுச்​சேரி திமுக மாநில அமைப்​பாளர்சிவா அனுப்​பிய கடிதம்: வரலாற்று ரீதி​யாக, தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி​யில் பொதுத் தேர்தல்கள் பெரும்​பாலும் ஒரே நாளில் நடத்​தப் பட்டு வந்துள்ளன.

          

இந்த அணுகு​முறையி​லிருந்து வில​கு​வதற்​கான காரணங்​களை கூற வேண்​டும். தற்​போதைய புதுச்​சேரி சட்​டப்பேரவை பதவிக்​காலம் வரும் ஜூன் 15 வரை நீடிக்​கும். இப்​படி​யிருக்க, தேர்தல் அட்​ட​வணையை முன்​கூட்​டியே நடத்​து​வ​தில் உள்ள அவசரம் குறித்து தெரிவிக்க வேண்​டும்.

புதுச்​சேரி​யில் உள்ள 30 தொகு​தி​களில், 28 தொகு​தி​கள் புவி​யியல் ரீதியாகத் தமிழ்​நாட்டுக்​குள் அமைந்​துள்​ளன. இத்தகைய சூழ்​நிலைகளில், இரண்டு வெவ்​வேறு தேதி​களில் வாக்குப்​ப​திவை நடத்​து​வது, பிரச்சா​ரம் என்ற போர்வையில் வெளி​யாட்​கள் நடமாடு​வது, வாக்காளர் ஆள்மாறாட்ட அபாயங்​கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை​கள் உள்​ளிட்ட சவால்​களை உரு​வாக்​கக்​கூடும்.

புதுச்​சேரிக்கு தமிழ்​நாட்​டின் வாக்​குப்​ப​திவு நாளான ஏப்​ரல் 23-ல் இணைத்து நடத்​த வேண்​டும். தமிழகத்தில் வேலை நாளாக வரும் ஏப்​.9-ம் தேதி புதுச்​சேரி வாக்குப்​ப​திவை நடத்​தி​னால், இங்கிருந்து தமிழகத்​தில் பணி புரிவோருக்கு ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பை உறுதி செய்ய வேண்டும்.

வேட்​பு மனுக்​களை தாக்கல் செய்​யப் போதுமான கால அவகாசம் தேவைப்​படு​கிறது. அதனால் வேட்பு மனு செயல்​முறைக்கு நியாய​மான காலஅட்​ட​வணையை தரவேண்​டும்.

SCROLL FOR NEXT