தமிழகம்

மின்வெட்டு குறித்து கருத்து: தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக தரப்பில் அவதூறு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் ஏற்​படும் மின்வெட்டு பிரச்​சினைக்கு திமுக​வினர்​தான் காரணம் என்று தெரி​வித்​த​தால், தவெக எம்​எல்ஏ பல்​லவிக்கு அவதூறு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது’ என திமுக செய்​தித் தொடர்​பாளர் சரவணன் அண்​ணாதுரை தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தவெக அரசுக்கு என்ன செய்​வது என்றே தெரிய​வில்​லை; அவர்​கள் முற்​றி​லும் குழம்​பிப் போயிருக்​கிறார்​கள். மின்வெட்டு பிரச்​சினையை சமாளிக்க முதல்​வ​ரால் எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்க முடிய​வில்​லை.

தமிழகத்​தில் கோடைக்​காலம் உக்​கிர​மாக இருப்​பது இது முதன்​முறை அல்ல. இதற்கு முன்​பும் இதே​போல்​தான் இருந்​தது. ஆனால், அப்​போதெல்​லாம் எங்​களிடம் திறமை​யான நிர்​வாகி​களும் அதி​காரி​களும் இருந்​த​தால், நிலை​மையை சீராகக் கையாள முடிந்​தது.

தற்​போதைய சூழலில், தவெக அமைச்​சர்​கள் ஆளுக்​கொன்​றாக முரண்​பட்ட கருத்​துகளை கூறி வரு​கிறார்​கள். மின்​வெட்டு பிரச்​சினையை எப்​படி சமாளிப்​பது என்று தவெக அரசுக்கு தெரிய​வில்​லை.

அவர்​களின் நிர்​வாகத் தோல்​வியை திசை திருப்​புவதற்​காக, திமுக மீது எவ்​வித ஆதா​ர​மும் இல்​லாத, பொய்​யான குற்​றச்​சாட்​டு​களை சுமத்தி வரு​கிறார்​கள்.

தமிழகத்​தில் ஏற்​படும் மின்​வெட்டு பிரச்​சினைக்கு திமுக​வினர்​தான் காரணம் என்று திருவிக நகர் தொகுதி தவெக எம்​எல்ஏ பல்​லவி மிக​வும் பொறுப்​பற்ற முறை​யில் ஒரு கருத்தை தெரி​வித்​துள்​ளார்.

அதற்​காகத்​தான் அவருக்கு தற்​போது அவதூறு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. தனது பொய்யான குற்றச்சாட்டுக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT