தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பணிக்குழு அமைத்தது திமுக

செய்திப்பிரிவு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தலை முன்​னிட்டு திமுக சார்பில் பணிக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இது குறித்து திமுக இளைஞர் அணிச் செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணிக் கட்​சிகளின் ஆதர​வுடன் போட்​டி​யிடும் திமுக வேட்​பாளர்​களை ஆதரித்​துப் பிரச்​சா​ரப் பணி​களில் ஈடு​படும் இளைஞர் அணி நிர்​வாகி​களை​யும், இளம் பேச்​சாளர்​களை​யும்

ஒருங்​கிணைக்க கட்​சித் தலை​மை​யின் அறி​வுறுத்​தலின்​பேரில் மாநிலத் துணைச் செய​லா​ளர்​கள் கொண்ட குழுக்​கள் அமைக்​கப்​படு​கின்​றன.

அதன்​படி மது​ராந்​தகம் தொகு​திக்கு எஸ்​.ஜோயல், நா. இளை​ய​ராஜா, ப. அப்​துல் மாலிக், பிரபு கஜேந்​திரன், ஜி.பி. ராஜா ஆகியோர் கொண்ட குழு​வும் தாராபுரம் தொகு​திக்கு இன்பா ஏ.என். ரகு, கே.இ. பிர​காஷ் எம்​.பி. பி.எஸ். சீனி​வாசன் எம்​எல்ஏ, சி. ஆனந்​தகு​மார் ஆகியோர் கொண்ட குழு​வும் அமைக்​கப்​படு​கிறது.

இந்த நிர்​வாகி​கள், இரு தொகு​தி​களை​யும் சிறு சிறு பகு​தி​களாகப் பிரித்​துக்​கொண்​டு, தங்​களு​டைய மண்​டலங்​களுக்கு உட்​பட்ட இளைஞர் அணி நிர்​வாகி​களைப் பொறுப்​பாளர்​களாக நியமித்து வாக்கு சேகரிக்​கும் பணி​களில் தீவிர​மாக ஈடுபட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT