தமிழகம்

காவிரி விவசாயிகள் கருத்துகளை கேட்க திமுக சார்பில் குழு அமைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வறட்சி நிவாரணமும் அறிவிக்கவில்லை.

எனவே, டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் கருத்தை அறிய, திமுக சார்பில் திருச்சி சிவா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏ.கே.எஸ்.விஜயன், துரை சந்திரசேகரன், அருண்நேரு, முரசொலி, செந்தில் செல்வன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

இக்குழு நவ.25 முதல் ஒருவார காலம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தகவல்களைத் திரட்டி வழங்கும். அதில் இருந்து பெறப்படும் கோரிக்கைகள், தமிழக அரசுக்கு வழங்கப்படும்.

அதன் பிறகாவது டெல்டாவைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வரும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT