சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பின்னர் திமுகவில் கட்சி ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில் திமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழுக் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள் ளப்பட உள்ளது. அனைத்து தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.