சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘என் வாக்குச் சாவடி - வெற்றி வாக்குச் சாவடி’ என்ற தலைப்பில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (டிச.8) நடைபெற உள்ளது.
அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து, ஓரிடத்தில் அமரச் செய்து, காணொலி வாயிலாக பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.