திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி

 
தமிழகம்

“எதிர்க்கட்சியாகவே செயல்பட திமுக முடிவு” - கலாநிதி வீராசாமி தகவல்

வேட்டையன்

சென்னை: வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட திமுக முடிவு செய்துள்ளதாக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ட்வீட் செய்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கி உள்ளது காங்கிரஸ் கட்சி. இதனால் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறிந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. ஆட்சி அமிப்பதற்கான நகர்வுகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக - 59, அதிமுக - 47, காங்கிரஸ் - 5, பாமக - 4, ஐயூஎம்எல் - 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க்சிஸ்ட் - 2, விசிக - 2, தேமுதிக - 1, பாஜக - 1, அமமுக - 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ளது.

இந்த சூழலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணி முறிந்ததை அடுத்து, அக்கட்சியின் நிர்வாகிகள், தங்களது பழைய கூட்டணி கட்சி மீது பரஸ்பரம் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

“காங்கிரஸ் (மற்றும் இன்னும் பிற கூட்டணிக் கட்சிகளின்) துரோகத்தையும் மீறி, வலிமையான எதிர்க்கட்சியாகவே செயல்பட திமுக முடிவு செய்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில் பாஜகவை வலியுறுத்தி வருகிறது அதிமுக. இது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறோம்” என அவர் அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT