ராஜபாளையம்: நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் ஜெயிலர் - 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. ரஜினி ரசிகரான நகராட்சி திமுக கவுன்சிலர் ஜான் கென்னடி விரதம் இருந்து, அக்னி சட்டி எடுத்து திரையரங்குக்கு வந்தார்.
இதுகுறித்து கவுன்சிலர் ஜான் கென்னடி கூறுகையில், ‘பைரவி படத்திலிருந்து ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வருகிறேன். ராஜா சின்ன ரோஜா பட முதல் காட்சிக்கு பால் குடம் எடுத்து வந்தேன். ராகவேந்திரா படத்துக்கு விரதம் இருந்து வந்து படம் பார்த்தேன்.
எனது 2 மகள்களுக்கும் ரஜினி தான் பெயர் வைத்தார். 25 ஆண்டுகள் ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக இருந்து உள்ளேன். தற்போது 4-வது முறையாக கவுன்சிலராக உள்ளேன். ரஜினி பூரண உடல் நலத்துடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டி விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்து வந்தேன்’ என்றார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.