தமிழகம்

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (பிப்.27) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. இதுவரை முஸ்லிம் லீக், மதிமுக, மமக ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

          

தொடர்ந்து காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகளுடன் திமுக இன்று (பிப்.27) பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என துவக்கம் முதலே அழுத்தம் கொடுத்து வருவதால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தவெகவுடன் சேர காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரங்களில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT