தமிழகம்

நிரந்தர டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்தது சட்டவிரோதம்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

செய்திப்பிரிவு

சென்னை: டிஜிபி நியமனத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வு​களை மீறக்​கூ​டாது. தமிழகத்​தில் நிரந்தர டிஜிபி​யாக சந்​தீப் ராய் ரத்​தோரை நியமித்​தது சட்ட விரோதம் என தேர்​தல் ஆணை​யத்​தில் திமுக புகார் அளித்​துள்​ளது.

இது தொடர்​பாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு நேற்று அனுப்​பி​யுள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த நிலை​யில், இந்​திய தேர்​தல் ஆணை​யம் ஏப்​.2-ம் தேதி சந்​தீப் ராய் ரத்​தோரை நிரந்தர டிஜிபி​யாக நியமித்து உத்​தரவு பிறப்​பித்​தது. தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்கை சட்​ட​விரோத​மானது. உச்ச நீதி​மன்ற வழி​காட்​டு​தல்​களுக்கு எதி​ரானது.

முதலில் போலீஸ் படைக்​கான தலைமை அதி​காரியை நியமிக்​கும் அதி​காரம் தேர்​தல் ஆணை​யத்​துக்கு கிடை​யாது. உச்ச நீதி​மன்​றத்​தில் பிர​காஷ் சிங் வழக்​கில் வழங்​கப்​பட்ட தீர்ப்​பின்​படி, மாநில அரசு அனுப்​பும் 3 அதி​காரி​கள் பட்​டியலில் இருந்​து​தான் டிஜிபி தேர்வு செய்​யப்பட வேண்​டும்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் நேரத்​தில், தேர்​தல் ஆணை​யம் ஓர் அதி​காரியை டிஜிபி​யாக நியமிப்​ப​தாக இருந்​தால், தேர்​தல் முடி​யும் வரை அவரை ‘பொறுப்​பு’ டிஜிபி​யாக மட்​டுமே நியமிக்க முடி​யும்.

மேற்கு வங்​காளம் உள்​ளிட்ட இதர மாநிலங்​களில் தேர்​தல் ஆணை​யம் அவ்​வாறு​தான் பொறுப்பு அதி​காரி​களை நியமித்து இருக்​கிறது.

பாரபட்​ச​மான நடவடிக்​கை

ஆனால், தமிழகத்​தில் மட்​டும் சந்​தீப் ராய் ரத்​தோரை நிரந்தர டிஜிபி​யாக தேர்​தல் ஆணை​யம் நியமித்​திருக்​கிறது. இது சட்​டப்​படி செல்​லாது. இது தமிழகத்தை மற்ற மாநிலங்​களி​லிருந்து வேறு​படுத்​திப் பார்க்​கும் பாரபட்​ச​மான நடவடிக்​கை.

எந்த சூழலிலும் தேர்​தல் ஆணை​யம் நிரந்தர டிஜிபியை நியமிக்​கவே முடி​யாது. நிரந்தர டிஜிபி நியமனப் பணி​கள் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு மேற்​கொள்​ளப்​படும்.

எனவே, சந்​தீப் ராய் ரத்​தோரை நிரந்தர டிஜிபி​யாக நியமித்து ஏப்​ரல் 2-ம் தேதி பிறப்​பித்த உத்​தர​வில் தேர்​தல் ஆணை​யம் திருத்​தம் வெளி​யிட வேண்​டும்.

உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வு​களை மீறாமல் இருக்​கும் வகை​யிலும், சட்ட சிக்​கல்​களைத் தவிர்க்​கும் வகை​யிலும், சந்​தீப் ராய் ரத்​தோர் தேர்​தல் முடி​யும் வரை பொறுப்பு டிஜிபி​யாக மட்​டுமே இருப்​பார் என்​பதை அதில் தெளிவுபடுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT