தமிழகம்

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக அரசுக்கு திமுக, காங்கிரஸ் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்த ஆண்டு கர்​நாட​கா​வில் போதிய அளவு மழை பெய்​யாத​தா​லும், அணை​களில் போதிய அளவு நீர் இல்​லாத​தா​லும் தமிழகத்​துக்கு காவிரி நீரை வழங்​கும் நிலை​யில் நாங்​கள் இல்​லை.

காவிரி நீர் வேண்​டும் என்று தமிழக அரசு தரப்​பில் யாரும் கேட்​க​வில்​லை’ என்று அம்​மாநில நீர்​வளத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி தெரி​வித்​துள்​ளார்.

இதற்கு தமிழக எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் உள்​ளிட்​டோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேரவை எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: ஏற்​கெனவே பயிர்க்​கடன் தள்​ளு​படி என்ற பெயரில் விவ​சா​யிகளை ஏமாற்​றிய முதல்​வர், கர்​நாடக அமைச்​சரின் இந்​தப் பேச்​சுக்கு என்ன பதில் வைத்​திருக்​கிறார்? திமுக ஆட்​சி​யில் கடந்த 5 ஆண்​டு​கள் முழு​வதும், சரி​யாக ஜுன் 12 அன்று மேட்​டூர் அணை​யில் இருந்து குறுவை சாகுபடிக்​காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு இன்​று​வரை மேட்​டூர் அணை​யில் இருந்து தண்ணீர் திறக்​கப்​பட​வில்​லை. எம்​எல்​ஏக்​களை வாங்​கு​வ​தில் மட்​டும் கவனம் செலுத்​தாமல், கர்​நாட​கா​விடம் இருந்து நமக்கு வர வேண்​டிய தண்​ணீரை வாங்​கு​வ​தில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்​டும்.

திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி: ஜூன் மாதம் 9.91 டிஎம்​சி, ஜூலை மாதம் 32 டிஎம்சி காவிரி நீர் தமிழ்​நாட்​டுக்கு திறந்​து​விட வேண்​டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தல்​களை மீறி, தமிழகத்​துக்​குத் தண்​ணீர் தர முடி​யாது என்று கர்​நாடகா நீர்​பாசனத்​துறை அமைச்​சர் கூறி​யிருப்​பதை ஏற்​க​முடி​யாது.

தவெக அரசும், அவர்​களு​டன் அமைச்​சர​வை​யில் பங்கு கொண்​டிருக்​கும் தமிழக காங்​கிரஸ் கட்​சி​யும் இவ்​விவ​காரத்​தில் பொறுப்​புடன் செயல்​பட்​டு, தமிழகத்​துக்​கான காவிரி நீர் பங்​கீட்​டைப் பெற்​றுத்​தரு​வதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழக காங்​கிரஸ் கமிட்டி தலை​வர் மாணிக்​கம் தாகூர்: தமிழகத்​துக்கு தண்​ணீர் தர இயலாது என்று கர்​நாடக நீர்ப்​பாசனத்​துறை அமைச்​சர் மறுப்​பது, உச்ச நீதி​மன்ற உத்​தரவை நேரடி​யாக அவம​திக்​கும் செய​லாகும்.

மாநிலங்​களுக்கு இடையே​யான நதிநீர் ஒரு தேசிய சொத்​து, எந்​தவொரு தனி மாநில​மும் அதன் மீது பிரத்​யேக உரிமை கொண்​டாட முடி​யாது என்ற உச்ச நீதி​மன்​றத்​தின் 2018 இறு​தித் தீர்ப்பை கர்​நாடகா​வுக்கு நினை​வூட்​டு​கிறோம். எனவே, கர்​நாடக அரசு உடனடி​யாகத் தமிழகத்​துக்​குச் சேர வேண்​டிய தண்​ணீரைத் திறக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT