மஞ்சம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம்.

 
தமிழகம்

திமுக, அதிமுக வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் களை கட்டும் மாதவரம்

செய்திப்பிரிவு

மாதவரம்: ​மாதவரம் தொகு​தி​யில் திமுக சார்​பில் ஏற்​கெனவே இரு​முறை வெற்றி பெற்ற எஸ்​.சுதர்​சனம் மீண்​டும் போட்​டி​யிடு​கி​றார். அவரை எதிர்த்து அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​ச​ரான வி.மூர்த்தி போட்​டி​யிடு​கி​றார். இத்​தொகு​தி​யில் திமுக, அதி​முக இடையே நேரடிப்​போட்டி நில​வு​கிறது.

திமுக வேட்​பாள​ரான எஸ்​.சுதர்​சனம் மூன்​றாவது முறை​யாக இத்​தொகு​தி​யில் வென்று ஹாட்​ரிக் சாதனை படைக்க, தொகுதி முழு​வதும் கொளுத்​தும் வெயி​லில் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கி​றார்.

மாதவரம் பூங்​கா​வில் நடைப​யிற்சி மேற்​கொண்டு மு.க. ஸ்டா​லின் மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​றதும் உரிமைத் தொகையை ரூ. 2 ஆயிர​மாக உயர்த்தி வழங்​கு​வது​தான் முதல் கையெழுத்தாக இருக்​கும், எனக்​கூறி பெண்​களிடம் வாக்கு சேகரித்​தார்.

கூட்​டணி கட்​சி​யினர் புடைசூழ மாதவரம் பகு​தி​யில் உள்ள அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்​து, சென்னை மாநக​ராட்சி 29-வது வார்​டுக்கு உட்​பட்ட பொன்​னி​யம்​மன்​மேடு, மஞ்​சம்​பாக்​கம், மாத்​தூர் எம்​எம்​டிஏ, மணலி, மாதவரம் பஜார், மாதவரம் பால் பண்​ணை, புழல், காவாங்​கரை, செங்​குன்​றம் உள்​ளிட்ட பகு​தி​களில் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்ட திமுக வேட்​பாளர் சுதர்​சனத்​துக்கு அப்​பகுதி மக்​கள் ஆரத்தி எடுத்​தும், மலர் தூவி​யும் வரவேற்பு அளித்​தனர்.

மஞ்​சம்​பாக்​கம் பகு​தி​யில் வீர​வேல் பரி​சாக அளிக்​கப்​பட்​டது. கடந்த 10 ஆண்​டு​களாக தொகு​தி​யின் எம்​எல்ஏ என்ற முறை​யில் உங்​களில் ஒரு​வ​னாக உங்​களு​டன் இருந்​துள்​ளேன். அந்த உரிமை​யுடன் உங்​களிடம் நேரடி​யாக வாக்கு கேட்டு வந்​துள்​ளேன்.

எதிரணி​யினர் என்​னைப்​பற்றி எவ்​வளவு அவதூறு பரப்​பி​னாலும், மாதவரத்​தின் வளர்ச்​சிக்​காக​வும், மேம்​பாட்​டுக்​காக​வும் நிறை​வேற்​றி்க் கொடுத்​துள்ள திட்​டங்​கள் உங்​கள் அனை​வ​ருக்​கும் தெரி​யும்.

10 ஆண்​டு​களாக ஊழல் குற்​றச்​சாட்​டு​களுக்கு இடம் கொடுக்​காமல் தொகுதி மக்​களின் கல்​வி, சுகா​தா​ரம், குடிநீர், சாலை வசதி என அடிப்​படை தேவை​களுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து செய​லாற்றி உள்​ளேன். மாதவரம், செங்​குன்​றத்​தில் பேருந்து நிலை​யங்​களை​யும், பள்​ளிக்​கூடங்​களை​யும் ஹை-டெக்​காக மாற்​றிக் கொடுத்​துள்​ளேன்.

மாதவரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் எஸ்.மூர்த்தி.

பாடியநல்​லூரில் புதிய பேருந்து நிலை​யம் கட்​டப்​பட்டு வரு​கிறது. என்னை 3-வது முறை​யாக வெற்றி பெற வைத்​ததும் முதல் திட்​ட​மாக மாதவரம் பால் பண்ணை பகு​தி​யில் ‘டைடல் பார்க்’ கொண்டு வரு​வேன். இதன்​மூலம் குறைந்​தது 5 ஆயிரம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். மாதவரத்​தில் சித்த மருத்​துவ பல்​கலைக்​கழ​கம் அமைத்து தொகு​தியை முன்​மா​திரி​யாக மாற்​றிக்​காட்​டு​வேன்.

ஆவின் பால் பண்​ணையை மேம்​படுத்தி மகளிருக்​கான தொழில் வாய்ப்பை அதி​கரிப்​பேன். மாதவரம், அம்​பத்​தூர், பொன்​னேரி விரி​வாக்​கப் பகு​தி​களில் பாதாள சாக்​கடைத்​திட்​டம் மற்​றும் குடிநீர் வசதி​களை செய்து கொடுப்​பேன். தொகுதி மக்​கள் எந்த நேர​மும் என்னை எளி​தாக அணுகலாம், என்​றார்.

திமுக​வுக்கு போட்​டி​யாக வீதி, வீதி​யாக தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரும் அதி​முக வேட்​பாள​ரான மாதவரம் எஸ்​.மூர்த்​தி, என்னை மீண்​டும் வெற்றி பெற வைத்​தால் தொகு​தி​யின் சாலை கட்​டமைப்பை மாற்​று​வேன். அரசு பள்​ளி​கள் மற்​றும் மருத்​து​வ​மனை​களின் தரத்தை மேம்​படுத்​து​வேன். தெரு​வோர வியா​பாரி​களுக்கு இலவச கடைகளை கட்​டிக்​கொடுப்​பேன்.

கழி​வுநீர் மேலாண்மை திட்​டத்​தை​யும், குடிநீர் பற்​றாக்​குறையை​யும் தீர்ப்​பேன். குறிப்​பாக பெண்​களின் பாது​காப்​புக்கு முக்​கி​யத்​து​வம் கொடுப்​பேன் எனக்​கூறி வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கி​றார்.

இவர்​களுக்கு ஈடு​கொடுக்​கும் வகை​யில் தவெக வேட்​பாள​ரான எம்​.எல்​.​விஜய்​பிரபு​வும், நாதக வேட்​பாள​ரான கிருத்​திகா ஏழு​மலை​யும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​வ​தால், மாதவரத்​தில் திரும்​பும் திசையெல்​லாம் வேட்​பாளர்​களின் போட்டி பிர​சா​ரத்​தால் தேர்​தல் களம் அனல் பறந்து வருகிறது.

SCROLL FOR NEXT