சென்னை: தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அக்.5 முதல் 9-ம் தேதி வர ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இதில் இந்திய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்பதற்காக 18 எம்பி.க்கள் கொண்ட குழு நியூயார்க் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பிரதிநிதிகள் குழுவில் தமிழகம் சார்பில் தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை எம்.பி.யு மான எல்.கே.சுதீஷ் பங்கேற்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன் எம்பி.க்கள் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும், ஏஐ தொழில்நுட்பம், அதன் எதிர்காலப் பயன்பாடுகள், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்து ஐநாபொதுச் செயலாளரின் தொழில்நுட்ப தூதருடனும் எம்பி.க்கள் குழுகலந்துரையாட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.