தமிழகம்

திமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது: பிரேமலதா மீண்டும் உறுதி

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: ​தி​முக கூட்​ட​ணி​யில் தொடர்​கிறோம் என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா உறு​திபடத் தெரி​வித்​தார்.

விருத்​தாசலம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற பிரேமல​தா, வாக்​களித்த வாக்​காளர்​களுக்கு கடந்த 3 தினங்​களாக தொகு​திக்​குட்​பட்ட பகுதி​களில் நன்றி தெரி​வித்​தும், முக்​கிய அலு​வல​கங்​களை​ ஆய்வு செய்​தும் வரு​கிறார்.

அந்த வகை​யில் விருத் தாசலம் மார்க்​கெட் கமிட்​டிக்​குச் சென்று அங்கு எடையளவு குறித்​தும், கொள்​முதல் செய்​யப்​படும் தானி​யங்​கள் குறித்​தும், ஆலடி சாலை​யில் உள்ள ரேஷன் கடை​யில் பொருட்களின் தரம் குறித்தும் கேட்​டறிந்​தார். பின்​னர் பேருந்து நிலை​யம் பகு​தி​யிலும் ஆய்வு செய்​தார். அதைத்​தொடர்ந்து விருத்​தாசலம் மசூ​தி​யில் தொழுகை​யில் ஈடுபட வந்த இஸ்​லாமியர்​களிடம் நன்றி கூறி​னார்.

அப்​போது செய்​தி​யாளர் களிடம் அவர் கூறியதாவது: விருத்​தாசலத்​தில் வாக்​களித்த மக்​களுக்கு நன்றி தெரி​வித்து வரு​கிறேன். இனிவரும் காலங்​களில் தொகு​தி​யில் தங்​கி​யிருந்​து, அவர்​களது கோரிக்​கைகளை நிறைவேற்ற பாடுபடு​வேன். சென்​னை​யில் பெரும்​பலான இடங்​களில் மின் வெட்டு இருப்​ப​தாக அறிகிறேன். விஜய் தலை​மையி​லான புதிய அரசுக்கு அவகாசம் கொடுப்​போம். பொறுத்​திருந்து பார்க்​கலாம். இவ்வாறு கூறினார்.

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து விசிக, ஐயுஎம்​எல் போன்ற கூட்​ட​ணிக் கட்​சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரி​வித்​து, அமைச்​சர​வை​யிலும் இடம் பிடித்​திருப்​பது தொடர்​பாக கேட்​ட​போது, “அவர்​களது விருப்​பம். அதை விமர்​சிப்​ப​தில் அர்த்​தமில்​லை. எங்​களைப் பொறுத்​தவரை திமுக கூட்​ட​ணி​யில் தொடர்​கிறோம்” என்​றார். விசிக, ஐயுஎம்​எல் ஆகிய கட்சிகள் மீதான ஆ.ராசா விமர்​சனம் தொடர்​பாக​வும் கருத்​துக்​ கூற மறுத்​து விட்​டார்​.

SCROLL FOR NEXT