விருதுநகர்: சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நில அதிர்வால் பாதிப்பு ஏதும் இல்லை என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அரசின் நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிவகாசி அருகே ஜன. 29-ம் தேதி இரவு 9.06 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் சுகபுத்ரா கூறுகையில், இந்த நில அதிர்வால் எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.