தமிழகம்

முதியோர் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்: சென்னையில் நாளை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்​னை​: சென்​னை​யில் உள்ள முதியோர் மற்​றும் மாற்​றுத்​திற​னாகளின் வீடு​களுக்கு நேரடி​யாக சென்று ரேஷன் பொருட்​கள் விநி​யோகிக்​கும் பணி​கள் நாளை தொடங்​கப்​படும் என தெரிவிக்கப்பட்​டுள்​ளது.

இதுகுறித்து, கூட்​டுறவுத் துறை சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை: முதி​ய​வர்​கள் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் வீடு​களுக்கு சென்று பொதுவிநி​யோகத் திட்ட பொருட்​களை விநி​யோகிக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது.

இத்​திட்​டத்​தின் ​கீழ், 65 வயதுக்கு மேற்​பட்ட முதி​யோர், மாற்​றுத்​திற​னாளி​கள் வீடுகளுக்கு சென்று பொது விநி​யோகத் திட்ட பொருட்​கள் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

இந்​நிலை​யில், ஆகஸ்ட் 4, 5 மற்​றும் 6 ஆகிய தேதி​களில் சென்​னை​யில் ஆவடி, அம்​பத்​தூர், அண்​ணாநகர், சிதம்​பர​னார், கொளத்​தூர், பெரம்​பூர், ஆர்​.கே.நகர், ராயபுரம், திரு​வொற்​றியூர், வில்​லி​வாக்​கம், ஆயிரம்​விளக்​கு, சேப்​பாக்​கம், மயி​லாப்​பூர், சைதாப்​பேட்​டை, தி.நகர், சோழிங்​க நல்​லூர், பரங்​கிமலை, தாம்​பரம் மற்​றும் மதுர​வாயல் ஆகிய 19 மண்​டலங்​களில் கூட்​டுறவுத் துறை​யின்​கீழ் செயல்​பட்​டு​வரும் 1,346 நியாய​விலைக் கடைகளின் விற்​பனை​யாளர்​கள் அத்​தி​யா​வசி​யப் பொருட்​களை இல்​லம் சென்று விநி​யோகம் செய்ய உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

எனவே, இத்​திட்​டத்​தின்​கீழ் பயன்​பெறும் முதி​யோர்​கள் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் ஆகியோர் இந்த சேவையை தவறாமல் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT