எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

சட்டப்பேரவை தேர்தல்: அதிமுகவில் டிச.15-ல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

மோகன் கணபதி

சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனு படிவத்தை டிச.15 முதல் சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 - செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்;

முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT