தமிழகம்

முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சொத்து குவிப்பு வழக்கு: ஜூலை 14-க்கு விசாரணை தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

செங்​கல்​பட்டு: தமிழகத்​தில் கடந்த 2006- 11 கால​கட்​டத்​தில் தா.மோ. அன்பரசன் தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்​துகள் வாங்​கிய​தாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் தா.மோ.அன்​பரசன், அவரது மனைவி தமிழ்ச்​செல்​வி, மகன் தமிழ் மாறன் ஆகியோர் மீது வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் நீதிபதி சந்​திரசேகரன் முன்​னிலை​யில் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று இந்த வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களில் மகன் தமிழ் மாறன் நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜரா​னார். அன்​பரசன், அவரது மனைவி ஆஜராக​வில்​லை. இருப்​பினும், அவர்​களது தரப்பு வழக்​கறிஞர் நீதி​மன்​றத்​தில் ஆஜரின்​மைக்​கான தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை நீதி​மன்​றம் பரிசீலித்து ஏற்​றுக்​கொண்​டது.

இதனைத் தொடர்ந்​து, வழக்​கின் அடுத்த விசா​ரணையை ஜூலை 14-ம் தேதிக்கு நீதி​மன்​றம் ஒத்​தி​வைத்​தது. அன்​றைய தினம் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களுக்கு எதி​ராக குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யும் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் என தெரி​கிறது.

இந்த வழக்​கின் அடுத்​தகட்ட நடவடிக்​கை​யாக குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யப்​படு​வது முக்​கிய​மான​தாகக் கருதப்​படு​கிறது.

குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யப்​பட்ட பின்​னர், சாட்​சிகள் விசா​ரணை உள்​ளிட்ட வழக்கு விசா​ரணை நடை​முறை​கள் தொடங்​கும். வழக்​கின் முன்​னேற்​றம் குறித்து இருதரப்​பினரும் அடுத்த வி​சா​ரணை நாளில் ஆஜராகு​மாறு நீதி​மன்​றம்​ அறி​வுறுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT