தமிழகம்

குற்ற வழக்கு தொடர்(வு) இயக்குநர் நீக்கம்: அமைச்சர் நிர்மல் குமார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: முறைகேடு புகார் காரணமாக தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்(வு) இயக்குநராக இருந்த ஜி.கிருஷ்ணராஜாவை நீக்கி சட்டத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் குற்ற வழக்குத் தொடர்(வு)த்துறை இயக்குநராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றிய ஜி.கிருஷ்ணராஜா, 2024-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு ஒவ்வொரு துறையிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சட்டத்துறையில் நடத்தப்பட்ட ஆய்வில் குற்ற வழக்குகள் தொடர்(வு) துறையில் சில முறைகேடு கண்டறியப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்தத் துறை அமைச்சர் நிர்மல் குமாரின் உத்தரவின் பேரில், கிருஷ்ணராஜாவை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பொறுப்பு குற்ற வழக்கு தொடர்(வு) இயக்குநராக ஆர்.சேகர்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT