தமிழகம்

டாஸ்மாக்கில் ரூ.1,000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேலான விற்​பனை தொகையை டிஜிட்​டல் பரிவர்த்​தனை மூலம் மட்​டுமே பெறும் நடை​முறை இன்று முதல் அமலுக்கு வரு​கிறது.

தமிழகத்​தில் டாஸ்​மாக் கடைகளில் விற்​பனைத் தொகை ரொக்க பணம், யுபிஐ மற்​றும் கிரெடிட், டெபிட் கார்டு ஆகிய முறை​களில் பெறப்​படு​கின்​றன.

எனினும் விற்​பனைத் தொகை​யின் பெரும்​பகுதி ரொக்​க​மாகவே பெறப்​படு​கிறது. இதை கையாள்வதில் பணியாளர்களுக்கு பல சிரமங்​கள் உள்​ளன.

இந்​நிலை​யில், சென்னை மண்​டலம், திரு​வள்​ளூர் கிழக்கு மாவட்​டங்​களில் இன்று முதல் இந்த முறை அமல்​படுத்​தப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT