மானாமதுரை பேருந்து நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட ஆகாஷ்டெல்சனின் உறவினர்கள். (உள்படம்) உயிரிழந்த ஆகாஷ்டெல்சன்.

 
தமிழகம்

மானாமதுரையில் போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பா? - நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

மானாமதுரை: மா​னாமதுரை​யில் 2 தொழிலா​ளர்​களை வெட்​டிய வழக்​கில் கைதாகி, கால் முறி​வுக்​காக மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.

போலீ​ஸார் தாக்​கிய​தில் இறந்​ததாகக் கூறி உறவினர்​கள் மறியலில் ஈடு​பட்​டனர். சிவகங்கை மாவட்​டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்​தவர் ஜெயக்​கு​மார். கோழிக்​கடை​யில் வேலை செய்​கிறார். இவரது நண்​பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்​தில் பணிபுரி​கிறார்.

          

கடந்த 5-ம் தேதி இரவு இரு​வரும் பணி முடிந்து இருசக்கர வாக​னத்​தில் வீட்​டுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றனர். கிருஷ்ண​ராஜபுரம் பகு​தி​யில் சென்​ற​போது, அவர்கள் மீது அதே பகு​தி​யைச் சேர்ந் பொறி​யியல் பட்​ட​தாரி ஆகாஷ்டெல்​சன், குணா ஆகியோர் வந்த இருசக்கர வாக​னம் மோதி​யது.

இதில், இரு தரப்​புக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. தொடர்ந்​து, 4 பேரும் அங்​கிருந்து சென்​று​விட்​டனர். பின்​னர், கிருஷ்ண​ராஜபுரம் மயானம் அருகே ஜெயக்​கு​மார், அழகர் ஆகியோர் பேசிக் கொண்​டிருந்​தனர். அப்​போது, அங்கு வந்த ஆகாஷ் டெல்​சன், குணா ஆகியோர் இரு​வரை​யும் வாளால் வெட்​டி​விட்டு தப்​பிய​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்த புகாரின்​பேரில் மானாமதுரை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். இந்​நிலை​யில், கடந்த 6-ம் தேதி மேலப்​பசலை​யில் இருந்த ஆகாஷ் டெல்​சன், குணா ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அப்​போது, போலீ​ஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெல்​சன் பாலத்​திலிருந்து தவறி கீழே விழுந்​த​தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. படு​காயமடைந்த அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்து​வ​மனை​யில் போலீஸார் அனு​ம​தித்​தனர்.

கைதான இரு​வரை​யும் மார்ச் 18-ம் தேதி வரை நீதி​மன்ற காவலில் வைக்க மானாமதுரை குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, ஆகாஷ் டெல்​சன் மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் உள்ள சிறை​வாசிகளுக்​கான வார்​டுக்கு மாற்​றப்​பட்​டார்.

அங்கு அவருக்கு திடீரென மூச்​சுத்​திணறல் ஏற்பட்​டது. இதில், சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். இதுகுறித்து மதுரை போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். இதனிடையே, போலீ​ஸார் தாக்​கிய​தால்​தான் ஆகாஷ் டெல்​சன் உயி​ரிழந்​ததாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்​கள் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே மதுரை- ராமேசுவரம் சாலை​யில் நேற்று காலை மறியலில் ஈடு​பட்​டனர்.

சம்​பவத்​துக்கு காரண​மான போலீ​ஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும், நிவாரணம் வழங்​கு​வதோடு, குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும்என வலி​யுறுத்​தினர். அவர்​களிடம் நகாட்​சித் தலை​வர் மாரியப்​பன் கென்​னடி உள்​ளிட்ட திமுக பிர​முகர்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆனால், அதை ஏற்க மறுத்து முழக்​கமிட்​டனர்.

தொடர்ந்து கோட்​டாட்​சி​யர் ஜெபிகிரேசி​யா, கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் பிரான்​சிஸ் உள்​ளிட்​டோர் அவர்களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆனாலும் மறியல் தொடர்ந்தது. இதனால் போக்​கு​வரத்து முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டது. நீண்ட வரிசை​யில் வாக​னங்​கள் நின்​றன.

இதையடுத்​து, மதுரை, ராமேசுவரம் வழித்​தடத்​தில் சென்ற வாக​னங்​கள் அனைத்​தை​யும் போலீ​ஸார் சிவகங்​கை, கமுதி உள்​ளிட்ட வேறு வழித்​தடங்​களில் மாற்​றி​விட்​டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆகாஷ்டெல்​சனின் தந்தை ராஜேஷ்கண்​ணன், தாயார் ஆனந்தி ஆகியோர் கூறிய​தாவது: எங்​களது மகனை ஒரு வழக்​கில் தேடு​வ​தாகக் கூறி போலீ​ஸார் எங்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர். அப்​போதே உங்​களது மகன் கையில் கிடைத்​தால் கொன்​று​விடு​வோம் என்​றனர்.

சிறிது நேரத்​தில் எங்​களது மகனை கைது செய்​து​விட்​ட​தாகக் கூறி, எங்​களை விடு​வித்​தனர். தொடர்ந்து எங்​கள் மகனுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்​பட்​ட​தாகக் கூறினர். அவனை சென்று பார்த்​த​போது போலீ​ஸார் தன்னை அடித்​த​தாகக் கூறி​னான்.

இந்​நிலை​யில் திடீரென எங்​களது மகன் இறந்​து​விட்​ட​தாக கூறுகின்​றனர். இதில் எங்​களுக்கு சந்​தேகம் உள்​ளது. காவல்​துறை​யினர் விசா​ரணை என்ற பெயரில் காட்​டுப்​பகு​திக்​குள் அழைத்​துச் சென்​று, எங்​களது மகனின் காலை உடைத்​து​விட்​டனர். அதனால் தான் உயி​ரிழந்​து​விட்​டான்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

இதனிடையே இந்த மறியல் போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவமனையிலும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

SCROLL FOR NEXT