தாராபுரம் தொகுதி வாக்குகள் திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் சின்மய் புண்ட்லிக்ராவ் கோட்மரோ. உடன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே.

 
தமிழகம்

விறுவிறுப்பாக நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை வாக்குப் பதிவு

அக்.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: இடைத்​தேர்​தல் நடை​பெற உள்ள மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களில், நேற்று மாலை 6 மணி​யுடன் பிரச்​சா​ரம் முடிந்​தது. நாளை செவ்​வாய்க்​கிழமை வாக்​குப் பதிவு நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை பெரம்​பூர் மற்​றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் தவெக தலைவர் விஜய் போட்​டி​யிட்​டார். அவர் 2 தொகு​தி​களி​லும் வெற்றி பெற்​றார். அதன்​பின், முதல்​வர் பதவி ஏற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.

சி.​விஜய​ பாஸ்​கர் (வி​ராலிமலை), எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் (கரூர்), மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்) ஆகிய 6 அதி​முக எம்​எல்​ஏக்​கள், பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு ஆளும் தவெக​வில் இணைந்​தனர். இதையடுத்​து, அந்த 7 தொகு​தி​களும் காலி​யான​தாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

திருச்சி கிழக்​கு, விராலிமலை, கரூர், பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​கள் தொடர்​பான தேர்​தல் வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. அதனால், மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு மட்​டும் இடைத்​தேர்​தல் நடத்​து​வதற்​கான அறி​விப்​பைக் கடந்த செப்​டம்​பர் 7-ம் தேதி தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

இதையடுத்து மது​ராந்​தகம் தொகு​தி​யில் தவெக சார்​பில் மரகதம் குமர​வேல், திமுக சார்​பில் பரந்​தாமன், அதி​முக சார்​பில் கணிதா சம்​பத், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சுகந்​தி, நாம் தமிழர் கட்சி சார்​பில் ஜானகி​ராமன், சுயேச்சை வேட்​பாளர்​கள் என 28 பேர் களத்​தில் உள்​ளனர்.

அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் தவெக சார்​பில் சத்​ய​பா​மா, திமுக சார்​பில் சுகன்​யா,அதி​முக சார்​பில் பானு​ம​தி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் லட்​சுமணன், நாதக சார்​பில் கார்த்​திகா உள்​ளிட்​டோர் போட்​டி​யிடு​கின்​றனர். தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இரு கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் தனித்து போட்​டி​யிடு​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது. மது​ராந்​தகம் தொகு​தி​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யும், தாராபுரம் தொகு​தி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யும் வேட்​பாளர்​களை நிறுத்​தி​யுள்​ளன.

எனவே, இந்த இடைத்​தேர்​தலில் 5 முனைப் போட்டி நில​வு​கிறது. ஆளும் கட்​சி​யான தவெக. எதிர்க்​கட்​சி​யான திமுக மற்​றும் அதி​முக, நாதக, கம்​யூனிஸ்ட் என அனைத்து கட்​சிகளும் இரு தொகு​தி​களி​லும் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டன. தவெக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் விஜய் செப்​.25-ம் தேதி மது​ராந்​தகம் தொகு​தி​யிலும் செப்​.30-ம் தேதி தாராபுரம் தொகு​தி​யிலும் பிரச்​சா​ரம் செய்​தார்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த 2-ம் தேதி தாராபுரம் தொகு​தி​யிலும் 3-ம் தேதி மது​ராந்​தகம் தொகு​தி​யிலும் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். அதே​போல், திமுக இளைஞர் அணி செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின், செப்​.27-ம் தேதி மது​ராந்​தகம் தொகு​தி​யிலும், கடந்த 3-ம் தேதி தாராபுரம் தொகு​தி​யிலும் திமுக வேட்​பாளர்​களுக்கு வாக்கு சேகரித்​தார்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 2-ம் தேதி தாராபுரம் தொகு​தி​யிலும், 3-ம் தேதி மதுரந்​தகம் தொகு​தி​யிலும் பிரச்​சா​ரம் செய்​தார். அதே​போல், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஆகியோ​ரும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டனர்.

ஏற்​கெனவே, தாராபுரம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்த முதல்​வர் விஜய் நேற்று மீண்​டும் அத்​தொகு​தி​யில் சாலை வலம் (ரோடு ஷோ) சென்று இறுதி கட்ட பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டார். தேர்​தல் விதி​முறை​களின்​படி வாக்​குப்​ப​திவு தொடங்​கு​வதற்கு 48 மணி நேரத்​துக்கு முன்​பாகவே பொதுப் பிரச்​சா​ரங்​கள் அனைத்​தும் முடிக்​கப்பட வேண்​டும். அதன்​படி, இரு தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் முடிவடைந்​தது. இடைத்​தேர்​தலை முன்​னிட்டு 2 தொகு​தி​களி​லும் பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ள​தாகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​தார்.

அதன்​படி, நேற்று மாலை 6 மணி முதல் வாக்​குப் பதிவு நடை​பெறும் நாளான 6-ம் தேதி (செவ்​வாய்க்​கிழமை) மாலை 6 மணி வரை பிரச்​சா​ரம், பொதுக்​கூட்​டம், ஊர்​வலம் நடத்த அரசி​யல் கட்​சிகளுக்குத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

அதே​போல் இரு தொகு​தி​களி​லும் வெளி​யாட்கள், கட்சி பணி​யாளர்​கள் மற்​றும் வாக்​காளர்​ அல்​லாதவர்​கள் நேற்று மாலை 6 மணிக்​குப் பிறகு தொகு​தி​களை விட்டு வெளி​யேற உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது.

திருமண மண்​டபங்​கள், சமு​தாயக் கூடங்​கள், தங்​கும் விடு​தி​கள், இல்​லங்​கள் ஆகிய இடங்​களில் தங்​கி​யிருந்​தவர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டனர். வாக்​குப் பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடை​பெறுகிறது. இதையொட்டி மது​ராந்​தகம், தா​ராபுரம் தொகு​தி​களில்​ பலத்​த பாது​காப்​பு ஏற்​பாடு​கள்​ செய்​யப்​பட்​டுள்​ளன. வாக்​குப்​ப​திவு முடிந்​து வாக்​கு​கள்​ அக்​.9-ம்​ தேதி எண்​ணப்​படுகின்​றன.

SCROLL FOR NEXT