தமிழகம்

கைதிகள் தப்பினால் துப்பாக்கியால் சுடுங்கள்: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சிறை​யில் இருந்து கைதி​கள் தப்​பித்​தல் போன்ற அசம்​பாவிதம் ஏற்​பட்​டால், சிறைத் துறை​யினர் சூழலுக்கு ஏற்ப துப்​பாக்​கியை பயன்​படுத்​திக் கொள்ள அனுமதி வழங்கி சிறைத் துறை டிஜிபி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

சென்னை புழல் மற்​றும் தேனி சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்​தடுத்து தப்பி ஓட்​டம் பிடித்​தனர். குறிப்​பாக தேனி​யில் சிறைக் காவலர்​களை தாக்​கி​விட்டு தப்​பிய சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

தப்​பிய கைதி​கள் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்டு வந்​தா​லும், பலத்த பாது​காப்​பையும் மீறி தப்​பியது பாது​காப்பு குறைபாட்டை காட்​டுவ​தாக பல்​வேறு தரப்​பில் இருந்​தும் குற்​றச்​சாட்​டுகள் முன்​வைக்​கப்​பட்​டன.

இதுஒருபுறம் இருக்க, சிறைத் துறை அதி​காரி​களு​டன் அப்​பி​ரிவு டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் சமீபத்​தில் ஆலோ​சனை நடத்​தினார்.

மேலும், தமிழகம் முழு​வதிலும் உள்ள அனைத்து சிறைகளி​லும் உள்ள பாது​காப்பு ஏற்​பாடுகள் குறித்து உடனடி​யாக அறிக்கை தாக்​கல் செய்ய அறி​வுறுத்​தினார். மேலும், குறைகள் இருப்​பின் அதுகுறித்​தும் தெரி​விக்​கலாம் என தெரி​வித்து இருந்​தார்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள மத்​திய மற்​றும் மாவட்​டச் சிறைகளில் உள்ள கண்​காணிப்பு கோபுரங்​களில் பாது​காப்பு பணிகளில் ஈடு​பட்​டுள்ள போலீ​ஸார் துப்​பாக்​கி​யுடன் பணி​யில் இருக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

கடந்த 6 ஆண்​டுகளுக்கு முன்​புவரை கண்​காணிப்பு கோபுரங்​களில் சிறைத் துறை போலீ​ஸார் துப்​பாக்​கி​யுடன்​தான் கண்​காணித்து வந்​தனர். அதன் பிறகு அவை திரும்​பப் பெறப்​பட்ட நிலை​யில், மீண்​டும் துப்​பாக்கி பயன்​படுத்த அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

சிறைகளில் உள்ள கைதி​களின் நட​மாட்​டம் மற்​றும் நகர்​வு​களை உன்​னிப்​பாக கண்​காணிக்​கவும் சிறைத்​துறை அதி​காரி​கள் மற்​றும் பணி​யாளர்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. பார்​வை​யாளர்​கள் நேரத்​தில் கைதி​களை யார் யார் சந்​திக்​கின்​றனர்.

அதில், ஏதேனும் குற்ற சதித்​திட்​டம் உள்​ளதா என சிறைத் துறை உளவுப் பிரி​வினர் கண்​காணிக்​கவும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சிறை​யில் இருந்து கைதி​கள் தப்​பிச் சென்​றாலோ, தப்​பும் நோக்​கில் சிறைத் துறை அதி​காரி​கள் மீது தாக்​குதல் நடத்​தினாலோ சிறைத் துறை​யினர் துப்​பாக்​கியை பயன்​படுத்​திக் கொள்​ளலாம் என அனுமதி வழங்கி சிறைத் துறை டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் உத்​தர​விட்​டுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT