தமிழகம்

போலீஸாரின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்: டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தகவல்

செய்திப்பிரிவு

ஆவடி: `காவல் குடும்​பம் திட்​டத்​தின்கீழ் தமிழகம் முழு​வதும் போலீ​ஸாரின் குழந்​தைகளுக்கு திறன் மேம்​பாட்டு பயிற்சி முகாம்​கள் நடத்​தப்​படும்’ என டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக காவல் துறை​யில் பணிபுரி​யும் போலீ​ஸார் மற்​றும் அவர்களது குடும்​பத்​தினரின் நலனை கருத்​தில்​கொண்டு டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் ஆலோ​சனை​யின் பேரில் `காவல் குடும்பம்’ திட்​டம் கடந்த மாதம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தின்​ கீழ் ஆவடி காவல் ஆணை​யரகத்​தில் பணிபுரி​யும் போலீ​ஸார், அவர்​களது குடும்​பத்​தினரின் நலனை மேம்​படுத்​தும் நோக்​கில் நேற்று மருத்​துவ முகாம் மற்​றும் மழலை​யர் காப்​பகம் திறப்பு விழா நடை​பெற்​றது.

இதில், `காவல் குடும்​பம்’ திட்​டத்​தின் தலை​வர் வனிதா அகர்​வால் பங்​கேற்​று, ஆவடி, சத்​தி​யமூர்த்தி நகர் காவலர் குடி​யிருப்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள மழலை​யர் காப்​பகத்​தைத் திறந்து வைத்தார்.

காவலர் குடி​யிருப்பு அருகே உள்ள போலீஸ் கன்​வென்​ஷன் சென்டரில் சிறப்பு மருத்​துவ முகாமை தொடங்கி வைத்து டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பேசி​ய​தாவது: ‘காவல் குடும்​பம்’ திட்டத்தின் ​கீழ், தமிழகம் முழு​வதும் மருத்​துவ முகாம்​கள் மட்டுமல்​லாமல், போலீ​ஸாரின் குழந்​தைகளுக்கு திறன் மேம்​பாட்டு பயிற்சி முகாம்​கள் நடத்​தப்பட உள்​ளன. போலீ​ஸார் மீது புகார்​கள் வரக்​கூ​டாது. காவல் நிலை​யங்​களுக்​கான அவசர​கால நிதி மாதம்​தோறும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை இருந்ததை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை புதிய அரசு உயர்த்​தி​யுள்​ளது.

காவல்​துறை​யின் சிறப்​பான செயல்​பாடு​கள் பொது​மக்​களை சென்​றடைய வேண்​டும். பொது​மக்​களின் சேவை​யில் சிறப்​பாக பணி​யாற்​று​வோம். ஆவடி​யில் போலீ​ஸாரின் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்​தைகளுக்கு விளை​யாட்டு திறனை​யும், உடல் மற்றும் மனத்​திறனையும் ஊக்​குவிக்​கும் வகை​யில், விளையாட்டுத் திடலுடன் கூடிய சிறு​வர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஆவடி காவல் ஆணை​யர் செந்​தில்​கு​மார், அவரது மனைவி அருள்ஜோ​தி, இணை ஆணை​யர் சிவக்​கு​மார் மற்​றும் அதிகாரிகள் பங்​கேற்​றனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT