தமிழகம்

காவல் துறை அதிகாரிகள் வீட்டில் ஒரு ஆர்டர்லி கூட இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் தற்​போது பணி​யில் உள்ள மற்​றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதி​காரி​களின் வீடு​களில் ஒரு​வர்​கூட ஆர்டர்லி​யாக இல்லை என்று உயர் நீதி​மன்​றத்​தில் டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளார்.

அரசுத் துறை உயர் அதி​காரி​களின் வீடு​களில் தூய்​மைப் பணி, தோட்​டப் பணி மற்​றும் இதர வீட்டு வேலைகளில் கீழ்​நிலை பணி​யாளர்​களை ஈடு​படுத்​தும் ‘ஆர்டர்லி’ முறை, தமிழகத்​தில் பல்​வேறு துறை​களில் நடை​முறை​யில் இருந்து வந்​தது.

இந்நிலையில், காவல் துறை​யில் ஆர்டர்லி முறையை முற்​றி​லு​மாக ஒழிக்க வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் 2022-ம் ஆண்டு உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை அதி​காரி​கள் முழு​மை​யாக அமல்​படுத்​த​வில்லை என்று நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், சி.குமரப்​பன் அமர்வு குற்​றம் சாட்​டி​யிருந்​தது.

இந்​நிலை​யில், இதே அமர்​வில் இந்த வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழக டிஜிபி சார்​பில் அறிக்கை தாக்​கல் செய்​தார்.

‘தமிழகத்​தில் தற்​போது பணி​யில் உள்ள மற்​றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதி​காரி​களின் வீடு​களில் ஒரு​வர்​கூட ஆர்டர்லி​யாக இல்​லை’என்று அதில் கூறப்​பட்​டிருந்​தது.

இது ஆச்​சரியமளிப்​ப​தாக நீதிப​தி​கள் கூறினர். அதற்கு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர், “இது​வரை ஒரு​வர்​கூட ஆர்டர்லி​யாக இல்​லை. ஒரு​வேளை அப்​படி யாரும் பணி​யி்ல் இருப்​ப​தாக புகார் தெரி​வித்​தால், உடனடியாக நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.

இதையடுத்​து, நீதிப​தி​கள் கூறிய​தாவது: தமிழக சிறைத் துறை போல​வே, காவல் துறை​யிலும் ஆர்டர்லி முறை முற்​றி​லு​மாக ஒழிக்​கப்பட வேண்​டும். சக ஊழியரை ஆர்டர்லி​யாக வீட்டு வேலை செய்​யப் பயன்​படுத்​து​வது சட்​டப்​படி குற்​றம்.

அதே​போல, பணி​யில் இருப்​ப​தாகக் கூறி​விட்​டு, தனி்ப்​பட்ட வேலைகளில் ஈடு​படும் போலீ​ஸாரை​யும், போலீஸ் அதி​காரி​களை​யும் கண்​காணித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுதொடர்​பாக என்ன நடை​முறை பின்​பற்​றப்​படு​கிறது என்​பது குறித்து 19-ம் தேதி (இன்​று) தகவல் தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்​டு, விசா​ரணையை நீதிப​தி​கள் தள்​ளி​வைத்​தனர்.

SCROLL FOR NEXT