தமிழகம்

வடலூர் சத்தியஞான சபையில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பு

செய்திப்பிரிவு

கடலூர்: வடலூர் சத்​தி​யஞான சபை நிலத்​தில் உள்ள ஆக்​கிரமிப்​பு​கள் குறித்த விவரங்​கள் சேகரிக்​கப்​படு​கின்​றன.

கடலூர் மாவட்​டம் வடலூரில் உள்ள வள்​ளலார் தெய்வ நிலை​யத்​தின் சத்​தி​யஞான சபை நிலத்​தில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றக் கோரி தொடரப்​பட்ட வழக்​கு​களை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், 30 ஏக்​கர் பரப்​பிலான சத்​தி​யஞான சபை நிலத்தை ஆக்​கிரமித்​துள்​ளவர்​களுக்கு நோட்​டீஸ் அனுப்பி நட​வடிக்கை எடுக்​கவும், பெரு​வெளி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை தடுக்க சுற்​றுச்​சுவர் அமைக்​கவும் உத்​தர​விட்​டிருந்​தது.

இந்த வழக்கு மீண்​டும் கடந்த அக். 10-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, ஆக்​கிரமிப்​பாளர்​களின் விவரங்​கள் கிடைக்​க​வில்லை எனவும், அதுகுறித்து மாவட்ட ஆட்​சி​யரிடம் கோரப்​பட்​டுள்​ள​தாகவும் தெரி​விக்​கப்​பட்​டது. ஆக்​கிரமிப்பு விவரங்​களை வழங்க மாவட்ட ஆட்சி​யர் தரப்​பில் அவகாசம் கோரப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், 2024-ம் ஆண்டே ஆக்​கிரமிப்​பாளர்​கள் அடை​யாளம் காணப்​பட்ட நிலை​யில் விவரங்​களை வழங்​கு​வதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்​பியதுடன், நான்கு வாரங்​களில் ஆக்​கிரமிப்​பாளர்​களின் விவரங்​களை அறநிலை​யத்​துறைக்கு வழங்க வேண்​டும் என ஆட்சி​யர் தரப்​புக்​கும், விவரங்​களைப் பெற்​றதும், சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு நோட்​டீஸ் அனுப்பி உரிய நட​வடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என அறநிலை​யத்​துறைக்​கும் உத்​தர​விட்​டனர்.

இதையடுத்து சத்​தி​யஞான சபைக்கு சொந்​த​மான நிலங்​களை அளவீடு செய்து எல்லைகளை நிர்​ணயித்​தல் மற்​றும் ஆக்​கிரமிப்​பு​களை அடை​யாளம் காணும் பணி​யில் வரு​வாய்த்​துறை அதி​காரி​கள் நேற்று ஈடு​பட்​டனர்.

காவல்​துறை பாது​காப்​புடன் நடை​பெறும் களஆய்​வில், நிலங்​களின் தற்​போதைய எல்லைகள், ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்ள இடங்​களின் பரப்​பளவு மற்​றும் அவற்​றின் தன்மை ஆகியவை கணக்​கிடப்​படு​கின்​றன. மேலும், சம்​பந்​தப்​பட்ட நபர்​களிடம் உள்ள நில உரிமை ஆவணங்​கள், வரு​வாய்த்​துறை பதிவேடுகள் ஆகிய​வற்றை ஒப்​பிட்டு சரிபார்த்து, நிலங்​களின் உரிமை மற்​றும் வகைபாட்டை உறுதிப்​படுத்​தும் நட​வடிக்​கைகளை அதி​காரி​கள் மேற்​கொண்​டுள்​ளனர்.

ஆக்​கிரமிப்பு புகார்​களுக்கு உள்​ளானவர்​களிடம் உரிய ஆவணங்​களைப் பெற்று, அவர்​களுக்கு விசா​ரணை வாய்ப்​பளிக்​கவும் நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தற்​போதைய ஆய்​வின் மூலம் ஆக்​கிரமிப்​பில் உள்ள நிலங்​களின் அளவு, ஏற்​கெனவே அகற்​றப்​பட்​ட​தாகக் கூறப்​படும் ஆக்​கிரமிப்​பு​களின் நிலை மற்​றும் மீதமுள்ள நிலங்​களின் பயன்​பாடு உள்​ளிட்ட விவரங்​களை சேகரிக்​கும் பணி​யில் அதி​காரி​கள் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT