தமிழகம்

வாக்கு எண்ணும் மையத்தில் தினமும் டிஇஓ, ஆர்ஓ ஆய்வு: தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் ஒரு வாக்​குச்​சாவடி​யில்​கூட மறு​வாக்​குப்​ப​திவுக்கு பரிந்​துரை செய்​யப்​பட​வில்​லை. வாக்கு எண்​ணும் மையங்​களில் தின​மும் மாவட்ட தேர்​தல் அதி​காரி (டிஇஓ), தேர்​தல் நடத்​தும் அதி​காரி (ஆர்ஓ) ஆகியோர் ஆய்வு செய்ய வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் உத்தரவிட்டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு ஏப்​.23-ம் தேதி நடை​பெற்​றது. இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. வாக்​குப்​ப​திவு முடிந்த பின்​னர், 62 இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

அதைத்​தொடர்ந்​து, வாக்​குச்​சாவடிகளில் ஏதேனும் முறை​கேடு​கள் நடந்​திருந்​தால் அதைக் கண்​டறிந்​து, தேவைப்​பட்​டால் மறு​வாக்​குப்​ப​திவுக்​குப் பரிந்​துரைக்​க​வும், படிவம் 17ஏ (வாக்​காளர் வரு​கைப் பதிவேடு) மற்​றும் வாக்​குப்​ப​திவு நாளன்று பயன்​படுத்​தப்​பட்ட பிற தேர்​தல் ஆவணங்​களை வாக்​குப்​ப​திவுக்​குப் பிந்​தைய சரி​பார்ப்பு குறித்த ஒருங்​கிணைந்த அறி​வுறுத்​தல்​களை இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டிருந்​தது.

அதன்​படி, தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற அனைத்து தொகு​தி​களி​லும், ஏப்​.24-ம் தேதி பொதுப் பார்​வை​யாளர்​கள் மற்​றும் 1,825 வேட்​பாளர்​கள் அல்​லது அவர்​களது பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​களால் ஆவணங்​கள் சரி​பார்ப்பு நடத்​தப்​பட்​டது. வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற 75,064 வாக்​குச்​சாவடிகளில், சரி​பார்ப்​புக்கு பிறகு எந்​தவொரு வாக்​குச்​சாவடி​யிலும் மறு வாக்​குப்​ப​திவுக்கு பரிந்​துரைக்​கப்​பட​வில்​லை.

வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள பாது​காப்பு அறை​களுக்கு இரட்​டைப் பூட்டு முறை, 24 மணி நேர​மும் சுழற்சி முறை​யில் 2 அடுக்கு பாது​காப்பு போடப்பட்டுள்​ளது. பாது​காப்பு அறை​களுக்கு ஒரு நாளில் இரு​முறை தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் நேரில் சென்று ஏற்​பாடு​களைச் சரி​பார்க்க வேண்​டும்.

அதே​போல், தலை​மையகத்​தில் உள்ள பாது​காப்பு அறை​களுக்கு மாவட்​டத் தேர்​தல் அதி​காரி​கள் தின​மும் ஒரு​முறை​யும், தலை​மையகத்​துக்கு வெளியே உள்ள அறை​களுக்கு 3 அல்​லது 4 நாட்​களுக்கு ஒரு​முறை​யும் நேரில் சென்று ஆய்​வுசெய்ய வேண்​டும் என தேர்​தல்​ ஆணை​யம்​ உத்தரவிட்டுள்​ளது.

SCROLL FOR NEXT