தமிழகம்

“சிபிஐ விசாரணை கேட்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு” - அமைச்சர் அருண்ராஜ்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு விவகாரத்தில் கருத்து

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: “உதயநிதி ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தது திமுகவின் இரட்டை நிலைப்பாடு” என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று புதிய கட்டிடங்கள் திறப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலமாக தங்க மோதிரத்தை அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரியது என்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு. திமுக ஆட்சியில் இருக்கும்பொழுது ஒரு நிலைபாடு, மக்கள் தூக்கி அடித்த பிறகு ஒரு நிலைப்பாடு.

அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என எந்தெந்த வழக்குகளுக் எல்லாம் நீதிமன்றம் கூறியதோ, அப்போதெல்லாம் திமுக வேண்டாம் எனக் கூறியது. தற்பொழுது மாற்றிப் பேசுகிறார்கள்.

நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய (தவெக) நிலைப்பாடு. ஆனால், திமுக ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வருகிறார்கள்.

முதலில் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறிய திமுக, தற்பொழுது எதற்கு சிபிஐ விசாரணையை கேட்கிறார்கள்?

பாஜகவுடன் எந்த அண்டர்ஸ்டாண்டிங்கில் திமுக இருக்கிறது என அவர்கள் கூற வேண்டும்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நாகை எம்.பி வை.செல்வராஜ், எம்எல்ஏக்கள் மன்னார்குடி எஸ்.காமராஜ், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT