தமிழகம்

பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகே 1 கிமீ சுற்றளவு கட்டுமான தடையை நீக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கரணை ராம்​சார் சதுப்பு நிலத்​தைச் சுற்றி 1 கிமீ சுற்​றளவுக்கு விதிக்​கப்​பட்ட கட்​டு​மானத் தடை​யால் 1.20 லட்​சம் பட்டா உரிமை​யாளர்​கள் பாதிக்​கப்​பட்டு வரு​வ​தால், அத்​தடையை நீக்க வேண்​டும் என ரியல் எஸ்​டேட் துறை​யினர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து கிரெ​டாய் சென்னை தலை​வர் மெஹுல் ஹெச்​.தோஷி உள்​ளிட்​டோர் கூறிய​தாவது: பள்ளிக்கரணையில் மொத்​தம் 1,248 ஹெக்​டேர் நிலத்தை ராம்​சார் சதுப்​புநில​மாக அங்​கீகரித்து கடந்த 2022-ம் ஆண்டு அரசு அறி​வித்​தது.

இந்த 1,248 ஹெக்​டேர் பரப்​பளவு கொண்ட ராம்​சார் சதுப்​பு நிலப் பகு​தி​யைச் சுற்றி தாக்​கத்தை ஏற்​படுத்​தும் பகு​தி​யாகக் கருதி 1 கிமீ சுற்​றளவுக்கு ஒருங்​கிணைந்த மேலாண்​மைத் திட்​டம் தயாரிக்​கப்​படும் வரை கட்​டு​மானப் பணி​களுக்கு அனு​மதி வழங்​கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதனால் கடந்த 9 மாதங்​களாக வேளச்​சேரி, பள்​ளிக்​கரணை, துரைப்​பாக்​கம், மடிப்​பாக்​கம் என 15 பகு​தி​களில் ரியல் எஸ்​டேட் துறை​யில் மட்​டுமே ரூ.51,735 கோடி மதிப்​பிலான வணி​கம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

நேரடி மற்​றும் மறை​முக​மாக ரூ.19,790 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.இது​மட்​டுமின்றி 1 கிமீ சுற்​றளவு பகு​திக்​குள் இருக்​கும் 1.20 லட்​சம் பட்டா உரிமை​யாளர்​கள், தங்​களது நிலங்​களில் வீடு​களை கட்ட முடி​யாமலும், நிலங்​களின் மீது கடன் வாங்க முடி​யாமலும், தொழில்​களுக்கு கூட உரிமங்​களை புதுப்​பிக்க முடி​யாமலும் தவித்து வரு​கின்​றனர்.

எனவே, பள்​ளிக்​கரணை ராம்​சார் சதுப்பு நிலத்​தில் கூடு​தலாக சேர்க்​கப்​பட்ட 550 ஹெக்​டேர் நிலத்தை நில அளவை எண்​கள் மூலம் முறை​யாக அடை​யாளப்​படுத்​து​வதுடன், சதுப்பு நிலத்​தின் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் பகு​தியை நிர்​ண​யித்து இறு​தி​செய்து அதி​காரப்​பூர்​வ​மாக அரசாணை வெளி​யிடும் வரை 1 கிமீ சுற்​றளவுக்கு வி​திக்​கப்​பட்​டுள்ள கட்​டு​மான தடையை திரும்​பப்பெற வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT