தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஈரமாக இருந்த நெல்மணிகளை சாலையில் கொட்டி உலரவைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி. (கோப்பு படம்)

 
தமிழகம்

நெல் ஈரப்பத தளர்வு விவகாரம்: மத்திய அரசு நிராகரிப்பால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூா்: நெல் ஈரப்பத தளர்வு குறித்த தமிழக அரசின் கோரிக்​கையை மத்​திய அரசு நிராகரித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ள​தால் டெல்டா மாவட்ட விவ​சா​யிகள் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர். டெல்டா மாவட்​டங்​களில் 6.50 லட்​சம் ஏக்​கரில் குறுவை சாகுபடி நடை​பெற்​றது. சாகுபடி செய்​யப்​பட்ட நெல் கடந்த செப்​டம்​பர் மாதம் முதல் அறு​வடை செய்​யப்​பட்டு வந்​தது.

இதையடுத்​து, அக். 16-ம் தேதி முதல் வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கியது. ஆனால், அன்று முதல் டெல்டா மாவட்​டங்​களில் பரவலாக மழை பெய்​த​தால், நெல் அறு​வடைப் பணி வெகு​வாக பாதிக்​கப்​பட்​டது. இதனால் நெல்​லின் ஈரப்​ப​தம் அதி​கரித்து காணப்​பட்​டது.

எனவே, நெல்​லின் ஈரப்​பத அளவை 17-ல் இருந்து 22 சதவீத​மாக அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்​டும் என மத்​திய, மாநில அரசுகளுக்கு விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​தனர். அதே​போல, மாநில அரசும் மத்​திய அரசுக்கு கடிதம் எழு​தி​யது. இதையடுத்​து, மத்​திய குழு​வினர் டெல்டா மாவட்​டங்​களில் நெல்​லின் ஈரப்​ப​தம் குறித்து கள ஆய்வு மேற்​கொண்​டனர்.

இந்​நிலையில், ஈரப்பத தளர்வை மத்​திய அரசு நிராகரித்து விட்​ட​தாக தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். இதனால் டெல்டா மாவட்ட விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர். இதுகுறித்து தமிழ்​நாடு காவிரி விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர் எல்​.பழனியப்​பன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “நெல்​லின் ஈரப்பத தளர்வு குறித்து மத்​திய அரசு அறிவிக்​காதது பெரும் ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது.

ஒவ்​வொரு முறை​யும் ஈரப்​ப​தம் தளர்வு கோரும்​போதெல்​லாம், மத்​திய குழு ஆய்​வுக்கு வரு​வது சம்​பிர​தாய​மாகவே உள்​ளது. அதற்​கான செல​வில், பல நெல் உலர் இயந்​திரங்​களை வாங்​கலாம்” என்று தெரிவித்துள்ளார். தமிழக விவ​சா​யிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர் ப.ஜெகதீசன் கூறும்​போது, “விவ​சா​யிகள் வேண்​டுமென்றே நெல்​லில் ஈரப்​ப​தத்தை அதி​கரிப்​ப​தில்​லை. இயற்கை காரணங்​களால் ஈரப்​ப​தம் அதி​கரிப்​ப​தால் விவ​சா​யிகள் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

ஆனால், மத்​திய அரசு 17 சதவீதத்​துக்​கு மேல் அதி​கரிக்க வாய்ப்​பில்லை என்று தெரி​வித்​துள்​ளது. இது ஒட்​டுமொத்த விவ​சா​யிகளை​யும் ஏமாற்​றும் செய​லாகும்” என்​றார். தமிழக நலிவுற்ற விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர் கே.எஸ்​.​முகமதுஇப்​ராஹிம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தமிழக அரசு நெல் கொள்​முதல் செய்​யும்​போது, ஈரப்​ப​தம் குறித்து முடி​வெடுக்​கும் முழு அதி​காரத்​தை​யும் தமிழக அரசுக்கே வழங்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்கமாநிலப் பொதுச் செய​லா​ளர் சாமி நடராஜன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மத்​திய அரசு அதி​காரி​கள் ஆய்வு நடத்​திய பல நாட்​களுக்​குப் பின்​னர் ஈரப்பத அளவை உயர்த்த மத்​திய அரசு மறுப்​புத் தெரி​வித்​துள்​ளது கண்​டனத்​துக்​குரியது.

கோவை​யில் நடை​பெற்ற இயற்கை விவ​சா​யிகள் மாநாட்​டில் பிரதமர் மோடி பங்​கேற்ற நிலை​யில், நெல்​லின் ஈரப்​ப​தத்தை உயர்த்தி கொள்​முதல் செய்​வதற்கு அனு​மதி மறுத்​திருப்​பது தமிழக விவ​சா​யிகளுக்கு மத்​திய அரசு செய்​யும் துரோக​மாகும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT