சுரங்கம் தோண்டும் இயந்திரம் (கோப்புபடம்).

 
தமிழகம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: கூடுதலாக 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வாங்க முடிவு

2028-க்குள் பணிகளை முடிக்க திட்டம்

மு.வேல்சங்கர்

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், கால இழப்பை ஈடு​கட்ட கூடு​தலாக 4 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​களை வாங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இதன் மூல​மாக, குறித்த காலத்​துக்​குள் பணி​களை முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்​தடத்​தி​

லும், மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்​தடத்​தி​லும் பணி​கள் நடை​பெறுகின்​றன.

மொத்​தம் 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிட்​டு, பணி​கள் நடை​பெறுகின்​றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்​கப்​பாதை​யில் 43 சுரங்க ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன.

மெட்ரோ ரயில் கட்​டு​மானப் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்​பரில் தொடங்​கியது. சுரங்​கப்​பாதை பணியை பொருத்​தவரை, மாதவரத்​தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபரில் தொடங்​கியது.

இதைத்​தொடர்ந்​து, பசுமை வழிச்​சாலை, கலங்​கரை விளக்​கம், சேத்​துப்​பட்​டு, பனகல் பூங்கா உட்பட பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை பணி​கள் தொடங்​கின.

மெட்ரோ சுரங்​கப்​பாதை பணி​களை மேற்​கொள்​வதற்​காக, 23 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் (டிபிஎம் ) அடுத்​தடுத்து பயன்​படுத்​தப்​பட்​டன. இதைத்​தொடர்ந்​து, பசுமைவழிச் சாலை - அடை​யாறு, சேத்​துப்​பட்டு - ஸ்டெர்​லிங் சாலை, அயனாவரம் - பெரம்​பூர், பனகல் பூங்கா - கோடம்​பாக்​கம் சுரங்​கப்​பாதை பணி​கள் அடுத்​தடுத்து நிறைவடைந்​தன.

ராயப்​பேட்டை - ஆர்​.கே.​சாலை, பசுமை வழிச்​சாலை - மந்​தைவெளி ஆகிய சுரங்​கப்​பாதை பணி​களும் நிறைவடைந்​தன. இதுத​விர, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

2028-க்​குள் திட்​டப்​பணி​களை முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இலக்கை தொய்​வின்றி அடை​யும் வகை​யில், கூடு​தலாக 4 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​களை (டிபிஎம்​-கள்) கொள்​முதல் செய்ய மெட்ரோ ரயில் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: திரு​ம​யிலை​யில் இருந்து ஆழ்​வார்​பேட்டை வழி​யாக போட்​கிளப் நோக்கி இரண்டு சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் (டிபிஎம்) வரவுள்​ளன.

ஆழ்​வார்​பேட்​டை, பார​தி​தாசன் சாலை ஆகிய மெட்ரோ நிலைய பகு​தி​யில் போதிய இடவசதி இல்​லாத குறுகலான சாலை​களாக இருப்​ப​தால், இத்​தடத்​தின் சுரங்​கப் பாதைகள் மற்​றும் நிலை​யங்​கள் வழக்​க​மான பக்​க​வாட்டு அமைப்​பில் இல்​லாமல், ஒன்​றின் மேல் ஒன்​றாக இரண்டு அடுக்கு நிலத்​தடி அமைப்​பில் கட்​டப்​படு​கின்​றன.

எனவே, ஆழ்​வார்​பேட்​டை, பார​தி​தாசன் மெட்​ரோ​வில் சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் (டிபிஎம்​-கள்) எடுக்க முடி​யாத நிலை இருக்​கிறது. இதற்கு அடுத்து போட்​கிளப் மெட்​ரோ​வில் தான் டிபிஎம் வெளியே எடுக்க முடி​யும்.

பனகல் பூங்​கா​வில் இருந்து செல்​லும் டிபிஎம் நந்​தனத்தை தாண்டி செல்​கிறது. போதிய இடமில்​லாத​தால் நந்​தனத்​தில் டிபிஎம்​-மை வெளியே எடுக்க முடி​யாது. எனவே, இந்த டிபிஎம்​-​வும் போட்​கிளப் மெட்​ரோ​வில் தான் எடுக்க உள்​ளோம். திரு​ம​யிலை மெட்​ரோ​வில் இருந்து 4-வது வழித்​தடத்​துக்​கான டிபிஎம் நல்ல முறை​யில் செல்​கிறது.

மெட்ரோ நிலைய கட்​டு​மானப் பணிக்​கான ஒப்​பந்​தத்​துக்கு பின்​னரே பணி என்​ப​தால், டிபிஎம் இயந்​திரங்​கள் சுரங்​கத்​துக்​குள்​ளேயே 6 முதல் 8 மாதங்​கள் வரை காத்​திருந்​தன.

சுமார் 48 மாதங்​களாக உள்​ளே​யும், வெளி​யே​யும் டிபிஎம்​-கள் காத்​திருந்​தன. மந்​தைவெளி​யில் ஒரு ஆண்​டாக இரண்டு டிபிஎம்​கள் காத்​திருந்​தன. இதுத​விர, கெல்​லீஸ் - திரு​வான்​மியூர் வரை இரு​மார்க்​க​மாக மொத்​தம் 24 கி.மீ. சுரங்​கப்​பாதை பணிக்​காக, 48 மாதங்​கள் உள்​ளே​யும், வெளி​யே​யும் டிபிஎம்​கள் காத்​திருந்​தன.

இந்த காத்​திருப்பை ஈடு​கட்ட, கூடு​தலாக 4 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​களை வாங்க முடிவு செய்​துள்​ளோம். இதற்​கான அனு​மதி கிடைத்​து​விட்​டது.

4 டிபிஎம் இயந்​திரங்​கள் வரு​வதற்கு 4 மாதங்​கள் ஆகும்.

இந்த புதிய டிபிஎம்​-களை பூமிக்​கடி​யில் களமிறக்​கி, கால இழப்பை ஈடு​செய்​து, 2028-ம் ஆண்​டுக்​குள் அனைத்து பணி​களை​யும் முடித்து இலக்கை எட்​டு​வோம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

SCROLL FOR NEXT