தமிழகம்

3644 காவலர், 1299 எஸ்ஐ பணி நியமனத்தில் சிக்கல் நீடிப்பு: ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலை

நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: நீ​தி​மன்ற வழக்​கு​களால் 3,644 காவலர்​கள் பணி​யிடங்​கள் காலி​யாக இருப்​பதும் 1,299 எஸ்ஐ தேர்​வர்​கள் பணி​வாய்ப்​புக்​காக காத்​திருப்​பதும் தொடர்ந்து நீடிக்​கிறது. இதனால் இருக்​கிற காவலர்​களுக்கு பணிச்​சுமை அதி​கரிப்​பதுடன் எஸ்ஐ தேர்வு எழுதி காத்​திருப்​பவர்​களின் எதிர்​கால​மும் கேள்விக்​குறி​யாகி உள்​ளது.

குற்​றங்​களை கட்​டுப்​படுத்​த​வும் சட்​டம்​-ஒழுங்கை பாது​காக்​க​வும் காவல்​துறையை உயர் அதி​காரி​கள் முடுக்​கி​விட்​டுள்​ளனர். காவல் ​துறை​யின் செயல்​பாட்டை மேலும் வலுப்​படுத்​து​வதற்கு காலிப்​பணி​யிடங்​கள் இடையூறாக உள்​ளன. இந்​தாண்டு (2026) நில​வரப்​படி தமிழக காவல்​துறை​யில்

‘1 லட்​சத்து 34,667 பணி​யிடங்​கள் ஒப்​பளிக்​கப்​பட்​டுள்​ளன. ஆனால், சுமார் 1 லட்​சத்து 18,851 பேர் மட்​டுமே பணி​யில் உள்​ளனர். இதனால் சுமார் 15 ஆயிரம் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. சட்​டம் ஒழுங்​கு, ரோந்​து, குற்​றத்தடுப்​பு, விசா​ரணை உள்​ளிட்ட பல்​வேறு பணி​களை மேற்கொள்ள உரிய எண்​ணிக்​கை​யில் காவலர்​கள் இல்​லை. இதனால் பணியில் இருக்​கும் காவலர்​களுக்கு பணிச்​சுமை அதி​கரித்​துள்​ளது.

இதுத​விர பணிஓய்வு காரணத்தினாலும் காலி​யிடங்​களின் எண்​ணிக்கை மாதம்​தோறும் அதி​கரித்த வண்​ணம் உள்​ளது. எனவே, புதிய ஆட்​களை தேர்வு செய்து பணி​யில் அமர்த்த வேண்​டிய கட்​டா​யம் அரசுக்கு ஏற்​பட்​டுள்​ளது. ஆனால், காவலர் தேர்வு என்​பது உடனடி​யாக முடி​யும் பணி​யல்ல. அறி​விப்பு வெளி​யிடு​தல், எழுத்​துத்தேர்​வு, உடற்​தகுதி தேர்​வு, சான்​றிதழ் சரி​பார்ப்​பு, பயிற்சி என பல்​வேறு கட்​டங்​களை கடக்க ஒன்​றரை ஆண்​டு​களாகும்.

இதற்​கிடையே ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்ட ஆட்​சேர்ப்பு நடவடிக்​கைகளும் நீதி​மன்ற வழக்​கு​களால் தாமத​மாகி வரு​கின்​றன. தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் கடந்த ஆண்டு ஆக.21-ம் தேதி 2,833 2-ம் நிலை காவலர்​கள், 180 இரண்​டாம் நிலை சிறைக் காவலர்​கள், 631 தீயணைப்​பாளர்​கள் என மொத்​தம் 3,644 பணி​யிடங்​களுக்கு அறி​விப்பு வெளி​யிட்​டது.

இதற்​கான எழுத்​துத் தேர்வு நவ.9-ம் தேதி​யும், உடற்​தகுதி தேர்வு இந்​தாண்டு ஜன.22 முதல் பிப்​.2-ம் தேதி வரை​யும் நடை​பெற்​றது. இறுதி கட்​-ஆப் மதிப்​பெண்​கள் வெளி​யிடப்பட இருந்த நிலை​யில், நிர்​ண​யிக்​கப்​பட்ட உயரத்​தில் இருந்து 1 செ.மீ. குறை​வாக அனு​ம​திக்​கக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இதனால் இந்​தத் தேர்வு நடவடிக்கை நிலு​வை​யில் உள்​ளது.

இதே​போல், 1,299 எஸ்ஐ பணி​யிடங்​களுக்​கான அறி​விப்பு கடந்​தாண்டு ஏப்​.4-ம் தேதி வெளி​யிடப்​பட்​டு, எழுத்​துத் தேர்வு டிச.21-ம் தேதி நடை​பெற்​றது. தமிழ்​வழி கல்வி இடஒதுக்​கீடு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​ப​தால் இந்த தேர்​வும் அடுத்த கட்​டத்​துக்கு நகராமல் உள்​ளது.

ஒரு​புறம் காவல்​துறை​யில் சுமார் 15 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​கள், மறு​புறம் தேர்வு நடை​முறை​கள் முடிந்​தும் பணி​யில் சேர முடி​யாமல் ஆயிரக்​கணக்​கான தேர்​வர்​கள் காத்​திருக்​கும் நிலை என்ற அவல நிலை நீடிக்​கிறது.

எனவே, நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து முடித்​து, தகு​தி​யான தேர்​வர்​களை உடனடி​யாக பணி​யில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை வலுத்​துள்​ளது. எனவே, பணி ஓய்​வு​பெறும் காவலர்களின் எண்​ணிக்​கையை கருத்​தில் கொண்டு முன்​கூட்​டியே ஆட்​சேர்ப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்​வதே காலிப்​பணி​யிடங்​களின் அதி​கரிப்பை தடுக்க முடி​யும்.

SCROLL FOR NEXT